- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாசிப்பருப்பு பக்கோடா. பாசிப்பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது.
இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் மாலை நேரத்தில் கட்டாயம் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட கேட்பார்கள். இவர்களுக்கு கடைகளில் துரித உணவுகளை வாங்கி கொடுப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அதற்கு என்ன தீர்வாக இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள ஒரு கப் பாசிப்பருப்பில் பக்கோடாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்பவும் டீ, காபியோட ஒரே மாதிரி வடை, சமோசா, பஜ்ஜி அப்படின்னு சாப்பிடாம இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சு பாருங்கள் அதுக்கு அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இப்போது வாருங்கள் இந்த சுவையான பாசிப்பருப்பு வச்சு செய்யக்கூடிய பக்கோடா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு பாசிப்பருப்பு அடை ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் அரிசியை நன்கு அலசி இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், ஓமம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.






