- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- snacks
தீபாவளிக்கு மிக்சர், முறுக்கு, அதிரசம், ரவா லட்டு அப்படின்னு விதவிதமான நிறைய செஞ்சாலும் வீட்டிலேயே ஓமப்பொடி செய்தால் ரொம்பவே ஜாலியா இருக்கும். வீட்லையே நிறைய செஞ்சு வைத்து எப்ப வேணும்னாலும் எடுத்து சாப்பிட்டுக்கலாம். ரொம்ப ரொம்ப கம்மியான பொருட்களை வைத்தே சூப்பரான இந்த ஓமப்பொடி ரெசிபியை செய்யலாம். இடியாப்ப அச்சுல போட்டு பிழிந்து செய்யும் போது கரெக்டான பதத்துல கிடைக்கும்.
இந்த சூப்பரான ஓமப்பொடி ரெசிபி கண்டிப்பா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். கடையில கிடைக்கிற மாதிரி அப்படியே வீட்லயும் செஞ்சு சாப்பிட முடியும். ரொம்ப ரொம்ப ஈஸியா இந்த ரெசிபியை செய்யலாம். இந்த ஓமப்பொடி செய்வதற்கு ஓமத்தை வறுத்து அரைத்து செய்ய வேண்டும். அரிசி மாவும் சேர்த்து கொள்வதால் நல்லா மொறு மொறுப்பாக இருக்கும்.
இந்த டேஸ்டான ஓமப்பொடியை இனிமேல் கடையில போய் வாங்காதீங்க வீட்டிலேயே இந்த ஈஸியான முறையில் செய்து வைத்துக் கொள்ளலாம். இதுல பெருங்காயத்தூள் கண்டிப்பா சேர்க்கணும் ஏனென்றால் நம்ம கடலை மாவு எல்லாம் சேர்க்கிறதால பெருங்காயத்தூள் சேர்த்தா வாயு தொல்லை இல்லாமல் இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஓமப்பொடி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் அதிரசம் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் ஓமம் சேர்த்து வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்து எடுக்கவும்.
கலந்து வைத்த மாவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து ஓம தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இடியாப்ப அச்சில் சேர்த்து சூடான எண்ணெயில் பிழிந்து மிதமான தீயில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறியதும் உடைத்து விட்டு கருவேப்பிலையை பொரித்து சேர்த்து கொண்டால் சுவையான ஓமப்பொடி தயார்.






