Advertisement
ஸ்நாக்ஸ்

சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

Advertisement

வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த சாட் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் கடைக்களில் விற்கப்படும் சாட் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில்

உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தல்ல. இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் சுவையான தஹி பப்டி சாட் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Advertisement

தஹி பப்டி சாட் | Dahi Papdi Chaat Recipe in Tamil

Print Recipe
வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த சாட் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் கடைக்களில் விற்கப்படும் சாட் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தல்ல. இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் சுவையான தஹி பப்டி சாட் செய்யலாம்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword thattu vadai set, தட்டு வடை செட்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 125
Advertisement

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு
  • 1 பெரிய பவுள்

Ingredients

இனிப்பு சட்னி

  • 8 பேரீச்சம்பழம் விதை நீக்கியது
  • புளி சிறு நெல்லிக்காய் அளவு
  • 1 Tbsp வெல்லம்
  • 1/4 Tsp சீரகப்பொடி
  • 1/4 Tsp மிளகாய் தூள்

தஹி பப்டி சாட் செய்ய

  • 14 சின்ன தட்டு வடை
  • 1 கப் கெட்டியான தயிர்
  • 1 Tsp சர்க்கரை
  • 3 உருளைக்கிழங்கு வேக வைத்தது
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 3 Tbsp ஒமப்பொடி
  • 1 Tsp சாட் மசாலா
  • 1/2 Tsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி நறுக்கியது

Instructions

  • முதலில் பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கி கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு தயிரில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு தட்டில் தட்டுவடைகளை வைத்து, அதன் மேல் சிறிது மசித்த உருளைக்கிழங்கு வைக்கவும்.
  • பின் அதன் மேல் சிறிது வெங்காயத்தை வைத்து, மேலே சிறிது தயிரை ஊற்றி, உப்பு தூவி, இனிப்பு சட்னியை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவினால், தஹி பப்டி சாட் ரெடி.

Nutrition

Serving: 400G | Calories: 125kcal | Carbohydrates: 33g | Protein: 7g | Cholesterol: 1mg | Potassium: 152mg | Sugar: 2g | Iron: 1.5mg

இதையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி! சேலம் தட்டு வடை செட்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

15 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

1 மணி நேரம் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

3 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago