- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, evening
பொதுவாக இட்லி மீதமாகிவிட்டால் அதை வைத்து இட்லி உப்புமா தான் அனைவரும் செய்வார்கள். அதுவும் எப்போதும் இட்லி மீதமானால் செய்யும் இட்லி உப்புமா என்றால் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும் உணவாக மாறி வருகிறது. குழந்தைகள் இட்லி உப்புமாவைக் கண்டால் ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு இட்லியை கண்டாலே பிடிக்காமல் போய் உள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் இட்லி உப்புமா சமைக்காமல் அதில் தயிர் இட்லி செய்யும் போது அது பாரம்பரிய இட்லிகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவாக மாறும்.
அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக சுவை, ஆரோக்கியம் நிறைந்த உணவை உண்பார்கள். இந்த தாளித்த தயிர் இட்லி செய்வதற்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். ஈசியாக செய்யக்கூடிய அதே சமயம் குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியான இந்த சுவையான தாளித்த தயிர் இட்லியை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி காலை மற்றும் இரவு உணவுக்கு சரியான தேர்வாக அமையும். இல்லையெனில் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் ரொம்ப குஷி ஆகிவிடுவார்கள். இப்போது சுவையான தாளித்த தயிர் இட்லி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : இட்லி மாவு மீதம் ஆகிவிட்டால் இந்த இட்லி மாவு கொழுக்கட்டை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் இட்லியை துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பவுளில் தயிர் சேர்த்து அதனை நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் குடைமிளகாய், வெள்ளை எள், காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, இதனை தயிரில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதன்பிறகு இந்த தயிர் கலவையை பொரித்து வைத்துள்ள இட்லியில் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தாளித்த தயிர் இட்லி தயார்.






