- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், தேங்காய் திரட்டுப்பால் செய்து கொடுங்கள். இந்த தேங்காய் திரட்டுப்பால் தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும்.
தேங்காயும் வெல்லமும் இணைந்த இந்த இனிப்பு, நாவிற்குச் சுவையூட்டுவதுடன் உடலுக்குத் தேவையான நற்பலன்களையும் வழங்குகிறது. பண்டைய காலந்தொட்டு இல்லத்து விசேஷங்களிலும், விழாக்காலங்களிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் இந்தத் திரட்டுப்பால். இது பார்ப்பதற்கு அல்வா போல இருக்கும் ஆனால் அல்வாவை விட சுவை மிகுந்ததாக தெரியும். இந்த சுவையான தேங்காய் திரட்டுப்பாலை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். இப்போது இந்த சுவையான தேங்காய் திரட்டுப்பாலை பாரம்பரிய சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இன்ஸ்டன்ட் தேங்காய் தோசை
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து அரைத்து பின் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி பருப்பு, நறுக்கிய தேங்காய் துண்டுகள், திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும். இது நன்கு திரண்டு கடாயில் ஒட்டாமல் வந்ததும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் திரட்டுப்பால் தயார்.






