Home சட்னி தக்காளி பூண்டு சட்னி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க பத்து இட்லி சாப்பிடலாம்!!

தக்காளி பூண்டு சட்னி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க பத்து இட்லி சாப்பிடலாம்!!

வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய டிபன் வகைகள் என்னவென்றால் இட்லி தோசை தான். இந்த இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரி தான் சட்னி அரைச்சு போர் அடிச்சு போச்சா அப்ப இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி பூண்டு சட்னி செஞ்சு பாருங்க. இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்ப பேமஸ் ஆக இருந்த ஒரு சட்னி. வீட்ல எப்பவுமே தேங்காய் சட்னி தக்காளி சட்னி வெங்காய சட்னி, சாம்பார் புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான காரசாரமான சிம்பிளான பொருட்களை வைத்து செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செஞ்சு பாருங்க. இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

ஒரே ஒரு தடவை இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சட்னியை நீங்க செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த சட்னியை கண்டிப்பா ஒரு தடவை இட்லி தோசைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இட்லி தோசையை வேணாம் அப்படின்னு சொன்னா உங்க கூட பத்து இட்லி பத்து தோசை கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சட்னி சாப்பிட வைக்கும். இந்த சட்னி செய்வது ரொம்ப ஈஸி தான் ஆனா இந்த சட்னி செய்வதற்கு நாம் தக்காளி பூண்டு பச்சை மிளகாய் எல்லாத்தையும் எண்ணெயில் சேர்த்து வேக வைக்கணும்.

அதுக்கப்புறம் தக்காளியில் உள்ள தோலை உரிச்சு மசிச்சு சில பொருட்களை சேர்த்து செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி பூண்டு சட்னியை பழைய சாதத்துக்கும் சுடு கஞ்சிக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்ட் சூப்பரா இருக்கும். இதுல நம்ம பெரிய வெங்காயம் அப்படியே சேர்க்கப் போறோம். அதனால சாப்பிடறப்போ நல்லா கிரன்ச்சியா ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த தக்காளி பூண்டு சட்னியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

தக்காளி பூண்டு சட்னி | Tomato Garlic Chutney Recipe In Tamil

வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய டிபன் வகைகள் என்னவென்றால் இட்லி தோசை தான். இந்த இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரி தான் சட்னி அரைச்சு போர் அடிச்சு போச்சா அப்ப இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி பூண்டு சட்னி செஞ்சு பாருங்க. இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்ப பேமஸ் ஆக இருந்த ஒரு சட்னி. வீட்ல எப்பவுமே தேங்காய் சட்னி தக்காளி சட்னி வெங்காய சட்னி, சாம்பார் புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான காரசாரமான சிம்பிளான பொருட்களை வைத்து செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செஞ்சு பாருங்க. இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சட்னியை நீங்க செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த சட்னியை கண்டிப்பா ஒரு தடவை இட்லி தோசைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney, Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Tomato Garlic Chutney
Yield: 5 People
Calories: 154kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 தக்காளி
  • 8 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தக்காளியை இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
  • எண்ணெயிலேயே அனைத்தும் நன்றாக வதங்க வேண்டும். பிறகு தக்காளியின் மேல் உள்ள தோலை நீக்க வேண்டும்.
  • இப்பொழுது அனைத்தையும் நன்றாக வசித்து தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் தூவி கலந்து இறக்கினால் சுவையான தக்காளி பூண்டு சட்னி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 154kcal | Carbohydrates: 3.11g | Protein: 21g | Fat: 4.8g | Sodium: 62mg | Potassium: 157mg | Fiber: 15g | Vitamin A: 61IU | Vitamin C: 1298mg | Calcium: 19mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி