- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
குழம்பு வகைகளை போன்றே சட்னி வகைகளும் இன்று அதிகமாகிவிட்டது. அதுவும் ஆரோக்கியமான காலை உணவை உறுதி செய்யும் வகையில் இந்த சட்னி வகைகளும் இருக்கின்றன. அந்த விதத்தில் இன்று துவரம் பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சட்னி உங்கள் காலை உணவை ஸ்பெஷலாக்கும். வேலைக்கு செல்லும் அவசரத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நேரம் விழி பிதுங்கி விடும். இது போன்ற சமயங்களில் இந்த சட்னி உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இது அரைத்தால் மதியம் சாப்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். துவரம் பருப்பில் குழம்பு, துவையல் போன்றவற்றை அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் துவரம்பருப்பு சட்னி செய்திருக்கீங்களா.? ஆம் துவரம் பருப்பை கொண்டு சட்னியும் செய்யலாம்.
இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் என அனைத்து வகையான கட்டு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். துவரம் பருப்பில் பருப்பு குழம்பு வைத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி சட்னி செய்து கொடுக்கலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த துவரம் பருப்பு கொண்டு செய்யப்படும் சுவைமிக்க சட்னியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள துவரம் பருப்பு, வர மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, புளி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சட்னியை ஒரு பவுளுக்கு மாற்றி விடவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
அவ்வளவுதான் இப்போது மிகவும் சுவையான துவரம்பருப்பு சட்னி தயார். இந்த துவரம்பருப்பு சட்னி சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






