Advertisement
சைவம்

வரகரசியை வைத்து பஞ்சு போன்ற ஆப்பம் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

பலரும் புழுங்கலரிசி பச்சரிசியை சேர்த்து ஆப்பம் செய்வார்கள் . ஆனால் வரகு அரிசியில் கூட  பஞ்சு போல சுவையான ஆப்பம் எளிதாக தயாரிக்க முடியும்! வரகு அரிசி கொண்டு இது போல நிறைய விஷயங்களை நாம் ஆரோக்கியமான முறையில் உணவுகள் தயாரிக்க முடியும். வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. ஆரோக்கியமான சத்தான மற்றும் உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்.

பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும் ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். வரகு அரிசியில் ஆப்பம் அருமையாக இருக்கும். ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்று இருக்க வேண்டும். நம் வீட்டில் இதே மாதிரி  வரகரிசி ஆப்பம் அருமையாக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

Advertisement

வரகரசி ஆப்பம் | Varagu Arisi Appam Recipe In Tamil

Print Recipe
பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும்ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். வரகு அரிசியில் ஆப்பம் அருமையாக இருக்கும்.ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்றுஇருக்க
Advertisement
வேண்டும். நம் வீட்டில் இதே மாதிரி வரகரிசி ஆப்பம் அருமையாக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்றுபார்ப்போம்.
 
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Varagu Arisi Appam
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 250

Equipment

  • 1 ஆப்ப கடாய்
    Advertisement
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கப் வரகரிசி
  • 1/2 கப் புழுங்கலரிசி & பச்சரிசி இரண்டும் சேர்த்து
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1/4 கப் தேங்காய் தண்ணி
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • சோடா உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை சர்க்கரை
  • 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள்

Instructions

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும்,
  • இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும்.
  • அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை தேங்காய் தண்ணி , சர்க்கரை சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவை விட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும்.

Nutrition

Serving: 2nos | Calories: 250kcal | Carbohydrates: 47g | Protein: 21g | Saturated Fat: 0.6g | Sodium: 3mg | Potassium: 366mg | Fiber: 10.3g | Sugar: 1.1g | Calcium: 4mg | Iron: 8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

3 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

12 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

13 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

15 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

16 மணி நேரங்கள் ago