- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வாழைத்தண்டு பக்கோடா. நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாக கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு மிகவும் கைகொடுக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் கட்டாயம் உண்ணவேண்டிய உணவில் இது முக்கியமானது.
காலங்காலமாகப் பொரியல், கூட்டு என்று மட்டுமே நாம் வாழைத் தண்டை சமைத்து வருவதால், சில நேரங்களில் ஒருவித அலுப்பை இது கொடுத்து கூடும். அதே வாழைத்தண்டை வைத்து சுக்கா, சமோசா, முறுக்கு, வடை, பக்கோடா என்று விதவிதமாகச் செய்யலாம். மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின் போதும், குழந்தைகளின் சிணுங்கலின் போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம் பெறுவதும் பக்கோடா தான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்து விடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் வாழைத்தண்டு வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் வாழைத்தண்டு சாம்பார் மணக்க மணக்க இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் வாழைத்தண்டில் மேல் பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் கேரட்டை தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, சில்லி ஃப்ளெக்ஸ், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , வாழைத்தண்டு, கேரட் சேர்த்து பிரட்டி பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் ஊற வைத்த காய்கறிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு பக்கோடா தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம்.






