Advertisement
சைவம்

சூப்பரான வெஜ் கறி தோசை அவசியம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு தோசை கொடுத்தாலும் சாப்பிடுவாங்க!

Advertisement

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை. அருமையான கறி தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த கறி தோசை.

எப்பவும் மட்டன், சிக்கனை வச்சு கறி தோசை செய்து சாப்பிட்டு இருக்க நாம் இப்போது ஆரோக்கியமான காய்கறிகளை வச்சு வெஜ் கறி தோசை செய்ய போறோம். இந்த கறி தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த வெஜ்  கறி தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த வெஜ் கறி தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம்.

Advertisement

இந்த வெஜ் கறி தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வெஜ் கறி தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா வெஜ் கறி தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.

வெஞ் கறி தோசை | Veg Kari Dosai Recipa In Tamil

Print Recipe
தோசைக் கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை. அருமையான கறி தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த கறி தோசை. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வெஜ் கறி தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா வெஜ் கறி தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
Course Breakfast
Cuisine tamilnadu
Keyword Veg Kari Dosa
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings
Advertisement
4
Calories 84

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் உருளைக்கிழங்கு
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் காலிஃப்ளவர்
  • 1/2 கப் மீல்மேக்கர்
  • 1 கப் இட்லி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கைப்பிடி புதினா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 சோம்பு சோம்பு

Instructions

  • முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சுடு தண்ணீரில் காலிஃப்ளவர் உப்பு சேர்த்து ஊற வைத்து அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  மீல் மேக்கரை வெந்நீரில் உப்பு, மஞ்சள்
    Advertisement
    தூள்,  சேர்த்து வேகவைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  •  பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கலந்து விட்டு காய்கறி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர்  , உப்புசேர்த்து வேக வைத்து கொள்ளவும்.காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  காய்கறிகளில்சேர்த்து நன்றாக மூடி போட்டு விசில் விடவும்.  காய்கறிகள் நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து தோசை  ஊற்றிஅதில் இந்த காய்கறி மசாலாவை சேர்த்து  நடுவில்வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
  • தோசை வெந்து பிறகு  சூடாகபரிமாறினால் சுவையான வெஜ் கறி தோசை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg

இதையும் படியுங்கள் : சாம்பார், சட்னியே தேவையில்லை காரசாரமான பூண்டு தோசை இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement
Ramya

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

8 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

9 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

11 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

13 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

14 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

15 மணி நேரங்கள் ago