Home சட்னி சுவையான வெங்காய சட்னி செய்வது!

சுவையான வெங்காய சட்னி செய்வது!

Vengaya Chutney

தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது யோசிக்காமல் வெங்காய சட்னி செய்து பாருங்கள் அனைவர்க்கும் பிடிக்கும், தினமும் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி,போன்ற சட்னிகளை செய்து தருவதால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போய்விடும். அதனால் ஒருமுறை இந்த வெங்காய சட்னியை செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

இந்த சட்னியில் தக்காளி, தேங்காய் சேர்க்காமல் செய்யப்படுகிறது வெறும் வெங்காயம் இருந்தால் போதும்,வ வீட்டில் இருக்கும் பொருளைவைத்து சுவையாகவும் சுலபமாகவும் சமைத்து விடலாம்.

வெங்காய சட்னில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் வாரம் ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள் சுவையாகவும்,அட்டகாசமாகவும் இருக்கும்.

Vengaya Chutney
Print
No ratings yet

வெங்காய சட்னி

தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது யோசிக்காமல் வெங்காய சட்னி செய்து பாருங்கள் அனைவர்க்கும் பிடிக்கும்
Prep Time25 minutes
Total Time25 minutes
Course: chutney
Cuisine: Indian, இந்தியன்
Keyword: onion chutney, vengaya chutney, வெங்காய சட்னி
Calories: 247kcal

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ கப் சின்னவெங்காயம்
  • 5 சிவப்பு மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • புளி சிறிய துண்டு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 சிவப்பு மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

வெங்காய சட்னி அரைப்பது.

  • ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் 5 சிவப்புமிளகாய், ½ கப் சின்ன வெங்காயம், சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  • வதக்கிய பிறகு அதை மிக்சியில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

தாளிப்பது:

  • கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாக தாளித்து அதில் சிறிதளவு கருவேப்பிலை சேக்கவும்.
  • பின்பு தலித்ததில் அரைத்த சட்னியை சேர்த்து கலந்து விடவும்.
  • இப்பொழுது சுவையான வெங்காய சட்னி தயார்….

Nutrition

Serving: 1g | Calories: 247kcal | Carbohydrates: 17g | Protein: 2.9g | Fat: 20g | Saturated Fat: 1.3g | Trans Fat: 0.1g | Sodium: 1204mg | Potassium: 289mg | Fiber: 2.8g | Sugar: 7g | Vitamin A: 8IU | Vitamin C: 15mg | Calcium: 5mg | Iron: 4mg

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here