- Advertisement -
கேக்னாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த ஒன்று. ப்ளம் கேக், கிரீம் கேக், ஐஸ் கிரீம் கேக், ரோல் கேக் இப்படி வித விதமான கேக் வகைகள் உள்ளன.
இதையும் படியுங்கள் : சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
கடைகளில் மட்டும் நாம் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நாமளே செய்து கொடுத்தால் குழந்தைங்களுக்கு ரொம்ப பிடிக்கும், வீட்டில் செய்வதால் சுத்தமாகவும் இருக்கும். இந்தப் பதிவில் கேக் மெரூதுவாக செய்வது எப்படி என்றும், அதற்குத் தேவையான பொருள்கள் பற்றியும் பார்ப்போம்.
-விளம்பரம்-
வெண்ணிலா கேக் | Vennila Cake Recipe in Tamil
கேக்னாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த ஒன்று. ப்ளம் கேக், கிரீம் கேக், ஐஸ் கிரீம் கேக், ரோல் கேக் இப்படி வித விதமான வகையில் உள்ளது. இந்த கேக்கை நாம் கடைகளில் மட்டும் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நாமளே செய்து கொடுத்தால் குழந்தைங்களுக்கு ரொம்ப பிடிக்கும், வீட்டில் செய்வதால் சுத்தமாகவும் இருக்கும். இந்தப் பதிவில் மெருதுவான வெண்ணிலா கேக் செய்வது எப்படி என்றும், அதற்குத் தேவையான பொருள்கள் பற்றியும் பார்ப்போம்.
Yield: 4 People
Calories: 110kcal
Equipment
- 1 கேக் ட்ரே
- 1 குக்கர்
- 1 அகலமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- 1/4 கப் எண்ணெய்
- 3/4 கப் வெள்ளை சர்க்கரை
- 150 g தயிர்
- 2 டம்ளர் மைதா மாவு
- 1/2 tsp பாக்கிங் சோடா
- 1 tsp பாக்கிங் பவுடர்
- 20 மில்லி வென்னிலா எஸ்ஸன்ஸ்
- 1 கேக் ட்ரே
- 1 குக்கர்
- 1 அகலமான பாத்திரம்
செய்முறை
- முதலில் மிக்ஸி ஜாரில் முட்டை,எண்ணெய், சீனி, தயிர் இவைகளை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து எடுத்ததை ஒரு அகல பாத்திரத்தில் மாற்றி அதோடு மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவைகளை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதோடு வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இந்த எஸ்ஸான்ஸ் சேர்ப்பதால் முட்டை வாடை வராமல் இருக்கும்.
- கலந்த பேட்டனை கேக் ட்ரேயில் சேர்த்துக் கொள்ளவும். அப்படி கேக் ட்ரே இல்லையென்றால் டிபன் பாத்திரத்தில் செய்யலாம். முதலில் குக்கரை ஒரு பத்து நிமிடம் நன்றாக சூடேற்றவும்.
- கேக் ட்ரேவை குக்கரில் வைத்து மூடி வைக்கவும். கேக் மெரூதுவாக வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகும். சரியாக 45 நிமிடம் கழித்து குக்கரை திறந்து பாருங்கள்.
- முடியை எடுத்து பார்த்தால் அவ்வளவு மென்மையாக மிருதுவாக இருக்கும், இந்த கேக்கில் கிரீம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
Nutrition
Serving: 600G | Calories: 110kcal | Protein: 12g | Fat: 1.5g | Cholesterol: 0.5mg | Potassium: 225mg | Sugar: 0.5g | Calcium: 8mg