- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பொதுவாக கீரை அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. கீரையில் நிறைய வகைகள் இருக்கின்றன அரைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, குப்பை கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, பாலக் கீரை அப்படின்னு சொல்லிட்டே போகலாம். இந்த ஒவ்வொரு கீரைகளையும் வைத்து நாம் ஒவ்வொரு ரெசிபி செய்தால் தான் அந்த கீரையை நம்ம ருசிச்சு சாப்பிட முடியும். வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு சத்துக்கள் கிடைக்கும். முக்கியமா இரும்புசத்து நிறையவே கிடைக்கும் ஹீமோகுளோபின் உடம்பில் அதிகரிக்கும்.
அதனால் கண்டிப்பாக வாரத்தில் மூன்று நாட்கள் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் வெந்தயக்கீரை வைத்து ஒரு சூப்பரான வெந்தயக்கீரை போண்டா தான் செய்யப் போறோம். இந்த போண்டாவை ஒரு முறை செய்து பாருங்கள் வீட்டில் இருக்கிற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி இதை நீங்கள் செய்வீர்கள். குழந்தைகளோட பிரேக் பாஸ்ட்க்கு இதை கொடுத்து விடலாம் ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம்.
இந்த போண்டாவை சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா வெந்தயக்கீரை போண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல கொத்தமல்லி இலைகள், ஓமம் சேர்ப்பதால் ரொம்ப ரொம்ப வாசனை ஓட மணமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வெந்தயக்கீரை போண்டா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் கடலை மாவு எடுத்து அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ரவை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அதனுடன் ஓமம், பெருங்காயத்தூள், நறுக்கிய வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு சோடா உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போண்டாவாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெந்தயக்கீரை போண்டா தயார்.






