Advertisement
சைவம்

குக் வித் கோமாளி தர்பூசணி துளசி ரசம் இப்படி செய்து பாருங்க! புது விதமான சுவையில்!

Advertisement

தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். நம் வாழ்வில் விதவிதமான ரசத்தை உணவில் சேர்த்திருப்போம் ஆனால் தர்பூசணி ரசம் ரெசிபி ஒரு வித்தியாசமான ரெசிபி. தர்பூசணி ஒரு அற்புதமான கோடை பழம் மற்றும் இந்த ரசம் ரெசிபி உங்கள் சமையலறையில் இந்த பருவத்தில் முயற்சிக்க வேண்டும். இந்த தர்பூசணி ரசம் லேசான இனிப்பு, காரமான மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இது எளிதானது மற்றும் உங்கள் தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து மகிழலாம். இது அருந்துவதற்கு அருமையாக இருக்கும், மேலும் இதை தயாரிக்க குறைவான பொருட்கள் தேவைப்படுகின்றன.

தர்பூசணி துளசி ரசம் | Watermelon Basil Rasam Recipe In Tamil

Print Recipe
தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். நம் வாழ்வில் விதவிதமான ரசத்தை உணவில் சேர்த்திருப்போம் ஆனால் தர்பூசணி ரசம் ரெசிபி ஒரு வித்தியாசமான ரெசிபி. தர்பூசணி ஒரு அற்புதமான கோடை பழம் மற்றும் இந்த ரசம் ரெசிபி உங்கள் சமையலறையில் இந்த பருவத்தில் முயற்சிக்க வேண்டும். இந்த தர்பூசணி ரசம் லேசான இனிப்பு, காரமான மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இது எளிதானது மற்றும் உங்கள் தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து மகிழலாம். இது அருந்துவதற்கு அருமையாக இருக்கும், மேலும் இதை தயாரிக்க குறைவான பொருட்கள் தேவைப்படுகின்றன.
Course LUNCH
Cuisine Indian
Keyword Rasam
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 46

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தட்டு
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் தர்பூசணி
  • 1 தக்காளி
  • 6 துளசி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையானஅளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்

தாளிக்க

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை           
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 டீஸ்பூன் நெய்

Instructions

  • தர்பூசணியை சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் நறுக்கிய தர்பூசணி, தக்காளி மற்றும் துளசி இலை சேர்த்து நன்கு அரைத்து பௌலில் வடிகட்டிக் கொள்ளவும்.
    Advertisement
  • பின் அடுப்பில் கடாயை வைத்து சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்திருக்கும் தர்பூசணி சாறை சேர்த்து கலந்து விடவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், அரைத்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ரசம் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  • பின்னர் ரசத்தை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.
  • பின்னர் மீதம் உள்ள தர்பூசணி பழத்தில் ஒரு சிறிய குழி கரண்டியால் ஸ்கூப் செய்து தர்பூசணியை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு சூடான கரி துண்டின் மீது நெய் விட்டு தர்பூசணி தட்டில் வைத்து ஒரு பாத்திரத்தால் 5 நிமிடங்களுக்கு மூடி விடவும்.
  • 5 நிமிடங்கள் கழித்து தர்பூசணி துண்டுகளை ரசக் கலவையில் சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் இப்போது வித்தியாசமான, சுவையான தர்பூசணி துளசி ரசம் தயார். இதனை சூப்பாகவும் சுடசுட குடிக்கலாம்.

Nutrition

Serving: 600g | Calories: 46kcal | Carbohydrates: 12g | Protein: 6.9g | Fat: 0.4g | Sodium: 6mg | Potassium: 112mg | Fiber: 0.6g | Calcium: 42mg | Iron: 0.24mg
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

38 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

3 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

13 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

15 மணி நேரங்கள் ago