- Advertisement -
தினமும் காலை டிபன் இட்லி, தோசை என்று சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ இந்த மாரி ஒரு முறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். கோதுமை மாவு ஸ்பிரிங் ரோல் இந்த ரெசிபி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.
-விளம்பரம்-
கோதுமைமாவு ஸ்பிரிங் ரோல் | Wheat Flour Spring Roll Recipe In Tamil
தினமும் காலை டிபன் இட்லி, தோசை என்று சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ இந்த மாரி ஒரு முறை செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். கோதுமை மாவு ஸ்பிரிங் ரோல் இந்த ரெசிபி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Yield: 3 people
Equipment
- 2 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் கோதுமை மாவு
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
- 1 வெங்காயம் நறுக்கியது
- ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கேரட் துருவியது
- புதினா இழை கொஞ்சம்
- 1 தக்காளி நறுக்கியது
- ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா
- ½ டீஸ்பூன் மல்லித்தூள்
- கறிவேப்பிலை கொஞ்சம் நறுக்கியது
- 1 ஸ்பூன் எள்ளு
- 1அல்லது 2 பச்சை மிளகாய் நறுக்கியது
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மாவை சேர்த்து அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்துதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதில் பிசைந்து அதன் மேல் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து விட்டு சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் துருவிய கேரட், நறுக்கிய புதினா இழை, சேர்த்து வதக்கவும்.
- கேரட் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதை மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
- தக்காளி மசிய வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சேர்த்து மசாலாவில் பச்சை வாசனை போக கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- வெந்ததும் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுத்து ஊறவைத்த கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதனை சப்பாத்தி பதத்தில் வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
- பிறகு தேய்த்த மாவில் நாம் செய்து வைத்த மசாலாவை கொஞ்சம் வைத்து அதன் மேல் இனொரு தேய்த்த சப்பாத்தி மாவை வைத்து மீண்டும் அதன் மேல் மசாலாவை கொஞ்சம் வைத்து இது போன்று மூன்று லேயர்களாக செய்து வைத்துக்கொள்ளவும்.
- அதனை ரோல் செய்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவிடவும்.
- வெந்ததும் ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கறிவேப்பிலை, எள்ளு, பச்சை மிளகாய், சேர்த்து எள்ளு பொரிந்ததும் ரோல் பண்ண மாவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வேகவிடவும். வெந்ததும் அதனை பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான ஸ்பிரிங் ரோல் தயார்.
Nutrition
Carbohydrates: 18g | Protein: 4g | Fat: 1.7g | Saturated Fat: 0.3g | Sodium: 188mg | Potassium: 98mg
- Advertisement -