இந்த ஒரு பூவில் இத்தனை மருந்துவ குணங்கள் இருக்கிறதா ? நம் உடலில் பல அற்புதகங்களை செய்யும் பூ!

- Advertisement -

தென்னை மரத்துல தேங்காய் தெரியும், அந்த தேங்காயை காய வச்சி ஆட்டி எண்ணெய் எடுக்குறது தெரியும். இதுக்குள்ள மருத்துவ குணம் பற்றியும் நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி தேங்காய் மட்டை தெரியும். ஆனா தென்னம்பூ பத்தி சில பேருக்குத் தெரியும், பலபேருக்கு அதைப்பற்றி தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதை பயன்படுத்துவாங்களான்னு தெரியாது. தென்னம்பூவுக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. வெடிக்காத தென்னம்பாளைக்கு உள்ள பூவையும் பயன்படுத்துவாங்க. அது வெடிச்சதுக்கு அப்புறம் அதுக்கு உள்ளே இருக்கிற பூவையும் பயன்படுத்துவாங்க.இது ரெண்டுக்கும் மருத்துவ குணங்கள் இருக்கு.

-விளம்பரம்-

உடல் சூடு குறையும்

வெடிச்ச தென்னம்பாளைக்குள்ள இருக்கிற தென்னம்பூவை கசாயம் வச்சி குடிக்கலாம். அதாவது 30 கிராம் தென்னம்பூவை எடுத்து அது மூழ்கிற அளவுக்கு தண்ணி ஊத்தி நல்லா வத்துற அளவுக்கு கசாயம் வைக்கணும். அதோட நாட்டு சர்க்கரை சேர்த்து 20 நாள் காலைல மட்டும் குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுதல், வெட்டை நோய், மேகநோய்கள், உடல் சூடு எல்லாம் குறையும். கூடுமான வரைக்கும் இந்த மருந்தைச் சாப்பிடும்போது புளி, உப்பு சேர்க்காம இருந்தால் ரொம்ப நல்லது.

- Advertisement -

மாதவிடாய்க்கோளாறு

அடுத்ததா பெண்களை ரொம்ப பாடாய்ப்படுத்தி எடுக்கிற பிரச்சினைகள்ல ஒண்ணு மாதவிடாய் காலத்துல வரக்கூடிய அதிக ரத்தப்போக்கு. சில பேருக்கு என்னென்ன வைத்தியம் பண்ணினாலும் நாள் கணக்குல, மாசக் கணக்குல ரத்தம் போய்க்கிட்டே இருக்கும். இதுக்கு தென்னம்பூ ரொம்ப நல்ல மருந்து. முதல்ல நாயுருவிச் செடியை வேரோட எடுத்து இலை, பூக்கதிர், வேர் எல்லாத்தையும் எடுத்து நல்லா கழுவி துண்டு துண்டா வெட்டி தென்னம்பூ சாறை விட்டு மையா அரைக்கணும். அதுல ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காலை, மதியம், சாயங்காலம்னு மூணு வேளை சாப்பிடணும். இதே மாதிரி தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

உடல் பலம் அதிகரிக்கும்

தென்னம்பூவை சுத்தம் பண்ணி அம்மியில வச்சி அரைச்சு சுண்டைக்காய் அளவு எடுத்து உருண்டை உருண்டையா உருட்டி வெயில்ல காய வச்சு பத்திரப்படுத்தி வைக்கணும். அதுல ஒவ்வொரு உருண்டையா காலைல, சாயங்காலம்னு வாயில போட்டு பசும்பால் குடிச்சிட்டு வந்தா ரத்த ஓட்டம் நல்லபடியா நடக்கும், உடல் பலம் கூடி மெருகேறும். இதே மாதிரி தென்னம்பூ சாப்பிட்டு வர்றது ஆண்மைக்கோளாறு பிரச்சினைகளை சரி பண்ணும். அதாவது வெடிக்காத தென்னம்பூவை எடுத்து அரைச்சு பால்ல கலந்து காலையில சாயங்காலம்னு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். முக்கியமா 48 நாள் அதாவது ஒரு மண்டலம் இதைச் சாப்பிட்டு வந்தா ஆண்மைக்கோளாறு சரியாகும். இன்னைக்கு பல பேர் குழந்தை இல்லாம கஷ்டப்பட்டு இருக்காங்க. அந்தப் பிரச்சினை சரியாகுறதுக்கு இந்த தென்னம்பூ அருமையான மருந்து.

தோல் நோய் குணமாகும்

தென்னம்பூவை அரைச்சி சாறு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி எடுத்த எண்ணெயை கரப்பான், புண், கொப்புளம், சொறி, சிரங்குக்கு தடவிட்டு வரலாம். அதுக்கு அப்புறமா சுட்ட சீயக்க்காயையும், மஞ்சளையும் சேர்த்து அரைச்சி அதைவச்சி காலைல, சாயங்காலம் சுத்தம் பண்ணனும். இந்தமாதிரி தொடர்ந்து செய்தா தோல் தொடர்பான நோய்கள் எல்லாம் சரியாகும். செலவே இல்லாம ரொம்ப சாதாரணமா இந்த நோயை சரிபண்ணலாம்.

-விளம்பரம்-