யானைநெருஞ்சில் மூலிகை! சிறுநீரகக் கல்லை கரைக்கும், வெள்ளைப்படுதலைப் போக்கும்!

- Advertisement -

யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த மூலிகையோட தழையில்தான் மருத்துவமே இருக்கு.

முழு செடிக்கும் மருத்துவ குணம்

யானை நெருஞ்சிலோட இலை, காய், வேர், தண்டுன்னு முழு செடிக்கும் மருத்துவ குணம் இருக்கு. இதை எப்படி சாப்பிடணுன்னு தெரிஞ்ச பிறகு சாப்பிடுறது நல்லது. யானைநெருஞ்சில் மூலிகையோட முழுச்செடியையும் தண்ணியில அலசினா அதோட தழைச்சத்து தண்ணியில இறங்கிரும். அதுல உள்ள முழு மருத்துவகுணமும் இறங்கி கொழகொழன்னு விளக்கெண்ணெய் மாதிரி ஆகிடும். இதை வடிகட்டி குடிச்சா பல பிரச்சினைகள் சரியாகும்.

- Advertisement -

சிறுநீரகக் கல் வெளியேறும்

சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு இது நல்ல மருந்து. அரை லிட்டர் வெறும் தண்ணியை எடுத்து அதுல முழுச்செடியையும் போட்டு நல்லா அலசணும். கொஞ்ச நேரத்துல தண்ணி கொழகொழப்புத்தன்மையா மாறிடும். அதை வடிகட்டி குடிக்கணும். அதுக்கு அப்புறமா வெறும் தண்ணி அரை லிட்டர் குடிக்கணும். முதல்ல யானை நெருஞ்சில் செடியை அலசுன தண்ணியும் அடுத்தது வெறும் தண்ணியும் குடிக்கணும். இப்பிடி தொடர்ந்து ஏழு நாள் காலைல வெறும் வயித்துல குடிச்சா போதும் கல் வெளியேறிரும். செலவே இல்லாம இந்த வைத்தியத்தை செஞ்சி பார்த்து பலனடைஞ்சவங்க பலபேர் இருக்காங்க.

விந்தணுக்குறைபாடு சரியாகும்

ஆண்கள்ல சில பேருக்கு அடிவயித்துல வலி எடுக்கும். வயிறு வீங்கி சிறுநீர் மஞ்சளா போகும். சிலநேரம் கஷ்டப்பட்டு சிறுநீர் வெளியேறும். இந்தமாதிரி நேரங்கள்ல ரெண்டு டம்ளர் தண்ணில 50 கிராம் சர்க்கரையையும் ரெண்டு கொத்து யானை நெருஞ்சில் செடியையும் போட்டு நல்லா கலக்கணும். அதை வடிகட்டி குடிச்சா இந்தப் பிரச்சினை சரியாகும். இந்தமாதிரி குடிச்சிட்டு வந்தா பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்துல வரக்கூடிய வயிற்றுவலியும்கூட சரியாகும். இதுமட்டுமில்ல ஆண்கள், பெண்களுக்கு வரக்கூடிய பால்வினை நோய்கள்கூட சரியாகும்னா பார்த்துக்கோங்க. ஆண்மைக்குறை, விந்தணுக்குறைபாடுகளும் சரியாகும்.

-விளம்பரம்-


வெண்புள்ளி நோய்க்கு மருந்து


வெண்புள்ளி நோய்க்குக்கூட யானைநெருஞ்சில் நல்ல மருந்து. நல்லா வெண்ணெயை கடைஞ்சு எடுத்த மோர் 200 மில்லி அளவு எடுத்துக்கிடணும். அதுல நாலு கொத்து யானைநெருஞ்சில் செடியைப்போட்டு கலக்குனா நல்லா கொழகொழப்பா மாறிவரும். அதை வடிகட்டி காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும். ஆனா ஆறு மாசம் குடிக்கணும். முதல்ல ஒரு மாசம் வரைக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிக்கணும். அதுக்கு அப்புறமா ரெண்டு நாள் விட்டு ஒருநாள்னு ஒரு மாசம் குடிக்கணும். தொடர்ந்து மாசத்துல ஒருநாள்னு ஆறு மாசம் வரைக்கும் குடிக்கணும். இந்த மாதிரி குடிச்சிட்டு வந்தா வெண்புள்ளி நோய் சரியாகும்.


வெள்ளைப்படுதல் புராஸ்டேட் வீக்கம்


பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல், வயதான ஆண்களுக்கு வரக்கூடிய புராஸ்டேட் வீக்கப் பிரச்சினை, தூக்கத்தில் விந்து வெளியாகுறதுன்னு பல பிரச்சினைகளை சரிபண்ணும். வயித்துப்புண் பிரச்சினை உள்ளவங்ககூட இதை முயற்சிக்கலாம்.குளிர்ச்சியூட்டக்கூடியதுங்கிறதால மழைக்காலத்துலயும், குளிர்ச்சியான சூழ்நிலையிலயும் முயற்சி பண்ண வேண்டாம். சிலபேருக்கு பிரச்சினை ஏதும் வராதுன்னா தாராளமா சாப்பிடலாம்.


அடையாளம் காண்பது அவசியம்


இது எல்லாத்துக்கும் மேல முதல்ல யானை நெருஞ்சில்னு சொல்லக்கூடிய ஆனை நெருஞ்சிலை அடையாளம் கண்டுக்கோங்க. இதை பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. குத்துச்செடியா வளரும், உருண்டையா காய் காய்க்கும். தெரியலன்னா மருத்துவர்கள்கிட்டயோ, பெரியவங்ககிட்டயோ கேட்டு தெரிஞ்சி பயன்படுத்துங்க. யாரோ சொன்னாங்கன்னு சொல்லிட்டு வேற மூலிகையை எடுத்து பயன்படுத்தாதீங்க. இதை காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. காட்டுப்பகுதியில தானா வளரக்கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here