ஏபிசி அல்வா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்!

- Advertisement -

ஏ பி சி ஜூஸ் குடிச்சிருப்பீங்க இப்போ ரீசண்டா ட்ரெண்ட் ஆகிட்டு இருக்க ஏ பி சி மால்ட் கூட ட்ரை பண்ணி குடிச்சிருப்பீங்க. ஆனா இது என்ன ஏ பி சி அல்வா னு யோசிக்கிறீங்களா? காசி அல்வா அல்வா கோதுமை அல்வா இருட்டுக்கடை அல்வா கேரட் அல்வா பீட்ரூட் அல்வா பிரட் அல்வா அப்படின்னு எக்கச்சக்கமான அல்வா ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி சுவையான ஏபிசி அல்வா வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அதுவும் இதுல அவ்ளோ ஆரோக்கியங்கள் நிறைஞ்சிருக்கு. இது கூட கொஞ்சம் சோள மாவு சேர்த்து வெள்ளை சர்க்கரையை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு ஏலக்காய் எல்லாம் போட்டு செஞ்சா சுவை அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

கேரட் பீட்ரூட் ஆப்பிள் இதெல்லாம் அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த சுவையான ஏ பி சி அல்வாவை செஞ்சு கொடுங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம டக்கு டக்குனு சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. இன்னும் இருந்தா குடுங்க அப்படின்னு கூட கேப்பாங்க அந்த அளவுக்கு இந்த ஏபிசி அல்வாவோட டேஸ்ட்டு சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்க அப்படினா அவங்களுக்கும் இந்த ஏபிசி அல்வா செஞ்சு கொடுங்க. வீட்ல யாருக்காவது பிறந்தநாள் கல்யாண நாள் வரும்போது கேசரி பாயாசம்னு பழைய மாதிரியே செய்யாம கொஞ்சம் புதுசா வித்தியாசமா இந்த மாதிரி ஏபிசி அல்வா செஞ்சு கொடுத்து அசத்துங்க.

- Advertisement -

உங்களோட பேவரட்டான யாராவது ஒருத்தர் உங்க வீட்டுக்கு வராங்க அப்படின்னா அவங்களுக்கும் நீங்க இந்த ரெசிபியவே செஞ்சு குடுங்க. சாப்டுட்டு அசந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த அல்வா உடைய ருசி தனியா இருக்கும். உங்க வீட்ல நிறைய ஆப்பிள் பீட்ரூட் கேரட் இருக்கு அது என்ன செய்றதுன்னு தெரியல அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா கவலையே படாத சட்டுனு இதை செஞ்சு கொடுங்க. குழந்தைங்க ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த அல்வாவை செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிட அடம் பிடிக்காமல் படிப்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான ஏ பி சி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ஏபிசி அல்வா | ABC Halwa Recipe In Tamil

ஏ பி சி ஜூஸ் குடிச்சிருப்பீங்க இப்போ ரீசண்டா ட்ரெண்ட் ஆகிட்டு இருக்க ஏ பி சி மால்ட் கூட ட்ரை பண்ணி குடிச்சிருப்பீங்க. ஆனா இது என்ன ஏ பி சி அல்வா னு யோசிக்கிறீங்களா? காசி அல்வா அல்வா கோதுமை அல்வா இருட்டுக்கடை அல்வா கேரட் அல்வா பீட்ரூட் அல்வா பிரட் அல்வா அப்படின்னு எக்கச்சக்கமான அல்வா ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி சுவையான ஏபிசி அல்வா வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அதுவும் இதுல அவ்ளோ ஆரோக்கியங்கள் நிறைஞ்சிருக்கு. இது கூட கொஞ்சம் சோள மாவு சேர்த்து வெள்ளை சர்க்கரையை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு ஏலக்காய் எல்லாம் போட்டு செஞ்சா சுவை அட்டகாசமா இருக்கும். கேரட் பீட்ரூட் ஆப்பிள் இதெல்லாம் அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த சுவையான ஏ பி சி அல்வாவை செஞ்சு கொடுங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம டக்கு டக்குனு சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time15 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: ABC Halwa
Yield: 5 People
Calories: 85kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 ஆப்பிள்
  • 2 கேரட்
  • 1 பீட்ரூட்
  • 2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 கப் சோள மாவு
  • 15 முந்திரி பருப்பு
  • 2 ஏலக்காய்
  • 1/4 கப் நெய்

செய்முறை

  • ஆப்பிள் பீட்ரூட் கேரட் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அந்தச் சாற்றினை வடிகட்டி அதனுடன் சோள மாவு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
  • இடையிடையே சிறிதளவு நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  • பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறியதும் முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்து கிளறவும். இறுதியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான ஏ பி சி அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 85kcal | Carbohydrates: 3.1g | Protein: 22g | Fat: 2g | Potassium: 106mg | Sugar: 18g | Vitamin A: 45IU | Calcium: 19mg | Iron: 38mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!