- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- chutney
இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யுங்கள். இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து, விட்டமின் சி, ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, மற்றும் மாங்கனீசு போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். பொதுவாக பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட்டிருப்போம். அதனால் வித்தியாசமாக பீட்ரூட்டில் சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போமா.! நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது.
ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பீட்ரூட் மாங்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க
Ingredients
Method
முதலில் தக்காளியை நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மாங்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.
பின் தக்காளி, மாங்காய், பீட்ரூட் மூன்றையும் தனித்தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் தக்காளி மற்றும் மாங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதங்க விடவும். பின் இரண்டு நிமிடங்கள் கழித்து பீட்ரூட் விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
பின் அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். தாளித்து வைத்துள்ளதை சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் மாங்காய் சட்னி தயார்.






