பிரக்கோலி காய்கறியின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

- Advertisement -

பிரக்கோலி என்ற காய்கறி முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று எடுத்து கொண்டால் பிரக்கோலியும் அதில் ஒன்றாக இருக்கும். பிரக்கோளியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் தன்மை உடையது. இப்பேற்பட்ட பிரக்கோலியை ரோமானியர்கள் அவர்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பிரக்கோலியை சாப்பிடும் போது மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்க கூடியது. இப்படி பல வகைகளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படும் பிரக்கோலியில் பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. அப்பேற்ப்பட்ட பிரக்கோலியை சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த உடல் நலம் குறித்த இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

புற்றுநோய்

பிரக்கோலியில் சல்போராபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகமாக காணப்படுவதால். நாம் பிரக்கோலியை உணவாக எடுத்துக் கொள்ளதால் நம்ம உடம்பில் ஏற்பட்டுள்ள புற்றுநோயின் ஆபத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடம்பில் புற்றுநோய் ஏற்படாதவாறு நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இந்த பிரக்கோலி.

- Advertisement -

மாரடைப்பு

இந்த நவீன காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் யார் யார் எப்போது உயிரிழக்கிறார்கள் என்று தெரியாது. இன்று நம்மிடையே நன்றாக அமர்ந்து பேசிக் கொண்டி இருப்பவர்கள் நாளைக்கு உயிரிழந்து விடுகிறார்கள். கேட்டால் திடீர் மாரடைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் பிரக்கோலியை நாம் உணவாக சாப்பிடும் பொழுது இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதுகாக்கிறது. மேலும் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படியாமல் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவியாக இருக்கிறது இதனால் மாரடைப்பு ஏற்படாது.

தைராய்டு

நம்மில் பலருக்கு தைராய்டு நோய்களால் இன்றும் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பிரக்கோலியை உணவாக சாப்பிடும் போது இது தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாக செயல்பட்டு வரும். மேலும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பிரக்கோலியை பச்சையாக உட்கொண்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு நம் கட்டுக்குள் வந்து விடும்.

கண்

இந்த உலகில் பிறந்த யாவரும் அவர்களுக்கு வயதாகிக் கொண்டு போவதை எப்பொழுதும் தடுக்கவே முடியாது. ஆனால் வயதாகும்போது ஏற்படும் நோய்களின் தன்மையை குறைக்கலாம். ஆம், நம்முக்கு வயதாகும் போது கண் பார்வை மங்க ஆரம்பிக்கும் கண் அதனுடைய சக்தியை இழக்க ஆரம்பிக்கும். மேலும் கண்களில் உள்ள திசுக்கள் நீர் தன்மையைக் கொண்டு உருவானதால். நாம் பிரக்கோலியை சாப்பிடும் பொழுது அதில் உள்ள சல்போராபேன் சத்துக்கள் கண்களில் ஏற்படும் பார்வை குறைபாடுகளை சரி செய்து கண்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here