எலும்பு புற்றுநோய்யின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

- Advertisement -

பொதுவாக புற்றுநோய் நாம் தலைப்பகுதியில் இருந்து கால் பகுதி வரை நம் உடம்பில் உள்ள அனைத்து இடங்களிலும் புற்றுநோய் வருவதற்கு உண்டான சாத்திய கூறுகள் உள்ளன. இப்படிப்பட்ட புற்றுநோய் எலும்பையும் விட்டு வைக்குமா நாம் எழும்பிலும் எலும்பு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 10 வயதில் இருந்து 30 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகமாக எலும்பு புற்றுநோய் காணப்படுகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

எலும்பு புற்றுநோய் முக்கியமாக நம் உடலில் உள்ள கை, கால் போன்ற நீண்ட எலும்புகள் உள்ள இடத்தில் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் எலும்பு புற்றுநோய் உடல் முழுவதும் பரவும் தன்மை இல்லாமல் இருந்தாலும் மற்ற உடல் உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்களை பரப்பி விடவும். இந்த எலும்பு புற்றுநோய் நம் உடலில் இருக்கும் போது சில அறிகுறிகளை வைத்து புற்றுநோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : அதிக கொழுப்பினால் நம் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா ? உயிரே போக வாய்ப்பு உள்ளது.

சோர்வு

உங்களது தினசரி வாழ்க்கையில் நீங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளை திடீரென்று செய்ய முடியாமல் போகிறது அல்லது உங்கள் உடல்நிலை எப்பொழுதும் சரியில்லாமல் இருக்கிறது போல் நீங்கள் உணர்கிறீர்கள். மேலும் எப்போது சோர்வாக இருக்கிறீர்கள்
என்று தோன்றுகிறது என்றால் உடனே மருத்துவரை சென்ற அணுகுங்கள் ஏனென்றால் சோர்வு என்பது எலும்பு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

-விளம்பரம்-

திடீர் எடை இழப்பு

உங்கள் உடம்பின் எடையை நீங்கள் திடீரென இழக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். ஏனென்றால் எழும்பு புற்றுநோய் மற்றும் வேறு புற்றுநோய் இருந்தாலும் திடீர் எடை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. புற்றுநோயிலுள்ள செல்களுக்கு அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படுவதால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆற்றலை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு எடை குறையும் பிரச்சினைகள் ஏற்படும்.

நடக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை

எப்பொழுதும் போல் சாதாரணமாக இருந்து கொண்டு வரும் உங்களுக்கு திடீரென்று சுத்தமாக நடக்கவே முடியவில்லை, உட்கார முடியவில்லை என்ற நிலை வந்து விட்டால். உடனடியாக மருத்துவரை சந்தித்து எலும்பு புற்றுநோய் உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். இதுவும் எலும்பு புற்றுநோய் இருக்கும் அறிகுறிதான்.

கட்டிகள்

உங்களுக்கு எலும்பு புற்றுநோய் இருந்தால் அதன் காரணமாக எலும்பின் மீது கட்டிய ஏற்படும் அந்த கட்டி வீரியம் இல்லாமல் இருந்தாலும் உங்கள் புற்றுநோய் செல்களை உடல் முழுவதும் பரப்பி விடும் தன்மை கொண்டது இதுவும் எலும்பு புற்றுநோய் அறிகுறிகள்.

-விளம்பரம்-

நடப்பதில் பிரச்சனை

எப்போதும் நடப்பதில் பிரச்சனைகள் வராத உங்களுக்கு திடீரென்று நடக்க முடியவில்லை நடப்பதில் சிரமம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் மருத்துவரை சந்தித்துக் கொள்ளுங்கள் இதுவும் எலும்பு பற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும்.

வலி

எப்பொழுதும் புற்றுநோய் ஏற்பட்டால் அந்த இடங்களில் வலிப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி அசாதாரணமாக இரவு நேரங்களிலும், பற்று நோய் உள்ள உடல் பகுதிகளை நீங்கள் பயன்படுத்தும் போது அந்த இடத்தில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இதுவும் எலும்பு புற்றுநோய்க்கு உண்டான அறிகுறி தான்.

எலும்பு எளிதில் உடையலாம்

உங்களுக்கு எலும்பு புற்றுநோய் வந்துவிட்டால் அதில் உள்ள புற்றுநோய் செல்கள் உங்கள் எலும்பை பலவீனமாக ஆக்கும் இதனால் உங்கள் எலும்பு பகுதி எளிமையாக உடைந்து போக வாய்ப்புள்ளது. எனவே எலும்பு உடைந்தால் மருத்துவரை சந்தித்துக் கொள்ளுங்கள் இதுவும் எழும்பு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி.

இதையும் படியுங்கள் ; வீடடில் உள்ள பொருட்களை வைத்து எப்படி உடல் எடையை குறைப்பது ?

காய்ச்சல் மற்றும் வியர்வை

எலும்பு புற்றுநோய் இருந்தால் அதை எதிர்த்து உங்கள் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் எதிர்த்து போராடும் பொழுது உங்களுக்கு காய்ச்சல் வரக்கூடும் மேலும் காய்ச்சல் வருவதாலும் புற்றுநோய் எதிர்த்து உடல் போராடுவதாலும் உங்களை குளிர்விப்பதற்காக இரவு நேரங்களில் வியர்க்க ஆரம்பிக்கும். ஆகையால் தொடர் காய்ச்சல் அதிக வியர்வை போன்றவையும் அறிகுறிகளில் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here