- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- sweets
பிரட் கீர் முஸ்லிம் வீடுகளில் பக்ரீத் ரம்ஜான் போன்ற பண்டிகைகள்ல அதிகமாவே பிரட் கீர் செய்து சாப்பிடுவார்கள். இந்த பிரட் கீர் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குடிக்க குடிக்க இன்னும் குடிச்சுகிட்டே இருக்கணும் போல தோணும். இந்த பிரேக்கிங் செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு வேலை தான். பிரட் துண்டுகள் இருந்தா இனிமேல் இந்த மாதிரி ஒரு தடவை பிரட் கீர் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க. இந்த பிரட் கீர் ஜில்லுனு சாப்பிட்டாலும் நல்லா இருக்கும் சூடா சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
ஏதாவது நல்ல பிரியாணி சிக்கன் மட்டன் அப்படின்னு வயிறு ஃபுல்லா சாப்பிட்டுவிட்டு கடைசியா இந்த பிரட் கீர் குடிச்சா அவ்வளவு ருசியா இருக்கும். ஏதாவது ஸ்வீட் சாப்பிடணும் போல ஆசையா இருந்தா எப்பவுமே ஒரே மாதிரியா பாயாசம் கேசரி என்ன செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான பிரட் கீர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பிரட் வச்சு பிரட் அல்வா பிரட் டோஸ்ட் சில்லி பிரட் அப்படின்னா பர்ஃபெக்ட்டான ஒரு ஸ்வீட்டா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான பிரட் கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் நெய் சேர்த்து பிரட் துண்டுகளை சிறிதாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வேறொரு கடாயில் அரை லிட்டர் பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக காய்ச்சவும்.
அதில் சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்த பிறகு வறுத்தெடுத்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிரட் துண்டுகள் 70% வெந்து வந்த பிறகு அதில் ஏலக்காய் தூள் பொடியாக்கிய முந்திரி பாதாம் பிஸ்தா அனைத்தையும் சேர்த்து இறக்கினால் சுவையான பிரட் கீர் தயார்.






