- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
முட்டைகோஸ் நிறைய இருக்கு அத வச்சு பொரியல் ஃப்ரைடு ரைஸ், முட்டைகோஸ் கூட்டு, முட்டைக்கோஸ் சாம்பார் இதெல்லாம் வெச்சு போர் அடிச்சு போச்சுன்னா அப்போ இனிமேல் முட்டைக்கோஸ் வச்ச இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த பக்கோடா ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். ஒரு தடவை இந்த பக்கோடா ரெசிப்பிய செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாருமே உங்ககிட்ட அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பாங்க. ஈவினிங்ல டீ காபி ஓட இந்த முட்டைகோஸ் பக்கோடா வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா உங்களுக்கு எப்பவும் பஜ்ஜி வடை அப்படின்னு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை டேஸ்டான முட்டைகோஸ் பக்கோடா செஞ்சு பாருங்க. இந்த பக்கோடா ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாம்பார் சாதம் வத்த குழம்பு சாதம் இது எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக கூட வச்சு சாப்பிடலாம். இந்த டேஸ்டான ருசியான முட்டைகோஸ் பக்கோடா நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா வெங்காய பக்கோடா செய்யாமல் முட்டைக்கோஸ் வச்ச இந்த பக்கோடா ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான முட்டைகோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு முட்டைக்கோஸ் சாதம் இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவ செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
சோள மாவு கடலை மாவு அரிசி மாவு, மிளகாய் தூள் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
லேசாக தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டைகோஸ் பக்கோடா தயார்.






