- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
மாலை நேரத்தில் மொறுமொறுவென்று ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு கடைகளில் விற்கும் மொறு மொறுவென தீனி வகைகளை வாங்கி சாப்பிட்டு வருவார்கள். அதில் பல்வேறு தீமைகள் கொண்டதாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் மாலை வேலையில் மொறுமொறுப்பான கொண்டக்கடலை வைத்து வடை செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கொண்டைக்கடலையை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் சுண்டல் அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு கொண்டைக்கடலை வடை செய்து கொடுங்கள். கொண்டைக்கடலை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கொண்டைக்கடலையில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்சி ஜாரில் பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், உப்பு, கொண்டைக்கடலையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சோம்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கொண்டைக்கடலை கலவையை சிறிதளவு எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை வடை தயார். இந்த வடையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.






