குழந்தைகள் உயரமாக வளர இந்த உணவுகளை சாப்பிட கொடுங்கள் ?

- Advertisement -

ஒரு மனிதன் தன் தாயின் கருவறையில் இருந்து வந்த நாளிலிருந்து சராசரியாக தன் 21 வயதை அடையும் வரை வளர்ந்து கொண்டே இருப்பான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில மரபியல் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற காரணங்களால் சில குழந்தைகள் ஒரு அளவுக்கு மேல் அவர்கள் வளர முடியவில்லை. இதை காரணமாக சமுதாயத்தில் கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ள ஆகிறார்கள். என் சமுதாயத்தில் இருந்து ஒதுக்க படுகிறார்கள். உயரம் குறைவாக இருக்க என்னதான் ஊட்டச்சத்து குறைபாடு, மரபியல் குறைபாடாக இருந்தாலும் அனைத்திற்கும் ஒரு தீர்வு இருக்கு. அது போல தான் நம் குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமான தேவையோ அவைகளை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் குழந்தைகளும் உயரமாக வளர்வார்கறள். என்னென்ன உணவுகளை உயரமாக வளர்வதற்கு சாப்பிடலாம் என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் இன்று காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

- Advertisement -

Youtube Sub

இதையும் படியுங்கள் : ஜாக்கிரதை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடம்பில் சக்கரை உள்ளது!

பச்சை காய்கறி

குழந்தைகள் உயரமாக வளர்வதற்காக பச்சைக் காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனனென்றால் பச்சை காய்கறிகளில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் அனைத்து பொருட்களும் சரியான கலவையில் கலந்திருக்கும். மேலும் கீரைகளையும் நம் உணவாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள இரும்பு சத்து நாம் குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு உதவுகிறது. அதுமட்டமில்லாமல் கீரையில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் உள்ளன.

-விளம்பரம்-

பாதம்

நாம் தினசரி பாதாம் சாப்பிட்டு வந்தால் உயரமாக வளர தேவைப்படும் அதிகமாக சத்துக்கள் இதில் உள்ளன. மேலு நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக தேவைப்படும் விட்டமின்கள், தாது உப்புக்கள், மெக்னீசியம், மாங்கீனசு, நார்ச்சத்துக்கள் அதிக அளவு அடங்கியுள்ளது . அதுமட்டுமில்லாமல் உயரமான வளர்ச்சிக்கு தேவைப்படும் எலும்பு வளர்ச்சிக்கும் பாதாம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

சிக்கன்

சிக்கனில் டாரைன் என்று ஒரு வகையான அமினா அமிலம் உள்ளது அதனால் நாம் சிக்கனை உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த சத்து நம் உடலில் உள்ள எலும்பு வளர்ச்சியை மற்றும் உடல் வளர்ச்சியை சீராக்கி நம் உயரமாக வளர்வதற்கு உதவுகிறது. மேலும் சிக்கனில் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். உயரத்தை அதிகரிப்பதற்கான விட்டமின் பி12 என்ற சத்து அதிகமாக சிக்கனில் காணப்படுகிறது ஆகையால் உயரம் கூடுவதற்கு சிக்கன் ஒரு சிறந்த உணவு.

பீன்ஸ்

உயரமாக வளர்வதற்கு நமக்கு தேவைப்படும் இரும்பு சத்து மற்றும் புரோட்டின் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் பீன்ஸில் அதிகமாக காணப்படுகிறது. எனவே நாம் பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் நம் உயரமாக வளர்வதற்கான ஹார்மோனை தூண்டி நம் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக பீன்ஸ் இருக்கிறது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here