தித்திக்கும் சுவையில் சாக்கோ லாவா கேக் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்இந்த கேக் ரெசிபியில் பல வகைகள் உள்ளன ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை விரும்பி உண்பார்கள். இந்த கேக்கிணை இப்பொழுதெல்லாம் பலரும் அவர்கள் வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறார்கள். அந்த வகையில் வீட்டிலேயே கேக் செய்து மகிழ இந்த ரெசிபி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

-விளம்பரம்-

சாக்லேட் லாவா கேக் சாக்கோ லாவா கேக் என்றும் உருகிய சாக்லேட் கேக் என்றும் அழைக்கப்படுகிறது, செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் முழு கோதுமை மாவு மற்றும் கோகோ பவுடர் உள்ளது. இந்த பதிவில் சுவையான சாக்கோ லாவா கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
5 from 2 votes

சாக்கோ லாவா கேக் | Choco Lawa Cake Recipe in Tamil

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். வீட்டிலேயே கேக் செய்து மகிழ இந்த ரெசிபி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சாக்லேட் லாவா கேக் சாக்கோ லாவா கேக் என்றும் உருகிய சாக்லேட் கேக் என்றும் அழைக்கப்படுகிறது, செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் முழு கோதுமை மாவு மற்றும் கோகோ பவுடர் உள்ளது. ரெசிபிகளுள் அதிகம் தேடப்பட்ட ஒன்று சாக்கோ லாவா கேக். இது மிகவும் எளிதானது மற்றும் எந்த நேரத்திலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது!
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert, sweets
Cuisine: Indian
Keyword: cake
Yield: 4 People
Calories: 357kcal

Equipment

 • 1 குக்கர்
 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

 • 1/2 கப் மைதா
 • 1/2 கப் சரசர்க்கரை
 • 4 ஸ்பூன் கோகோ பவுடர்
 • 2 முட்டை
 • 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
 • 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா உப்பு
 • 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
 • டார்க் சாக்லெட் தேவையானஅளவு
 • 250 கிராம் வெண்ணெய்
 • 1/4 ஸ்பூன் உப்பு                             

செய்முறை

 • முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து அதில் டார்க் சாக்லேட் சேர்த்து உருக்கி எடுக்க வேண்டும்.
 • இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா உப்பு ,வெண்ணிலா எசன்ஸ் எடுத்து கொள்ளவும்.
 • பின்னர் நாம் எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் உருக்கி வைத்திருக்கும் சாக்லேட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • இப்பொழுது கப் கேக் மோல்ட்டில் சிறு சிறு பாகங்களாக பிரித்து விடவேண்டும்.
 • பின்பு குக்கரில் ஒன்பது நிமிடம் வைக்க வேண்டும்.
 • சிறிது குளிர்ந்தவுடன் தூள் சர்க்கரையை தூவி அலங்கரிக்கவும்.
 • சுவையான சாக்கோ லாவா கேக் ரெடி. இந்த செய்முறையை வீட்டிலேயே முயற்சி செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Nutrition

Serving: 500g | Calories: 357kcal | Carbohydrates: 0.9g | Protein: 23g | Sodium: 171mg | Sugar: 4.5g | Vitamin A: 317IU

இதனையும் படியுங்கள் : மெருதுவான வெண்ணிலா கேக் வீட்லயே இப்படி செய்து பாருங்க!