- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- deserts
இந்த வெயிலுக்கு ஏதாவது ஒன்னு நல்லா குளு குளுன்னு சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கும். சாப்பாடு கூட தேவைப்படாது ஏதாவது டிஃபரண்டா ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணும். அந்த மாதிரி தோணும் போது ஜூஸ், ஃபலூடா, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் இந்த மாதிரி தான் நிறைய சாப்பிட்டு இருப்போம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமா புட்டிங் மாதிரி ஏதாவது செஞ்சு பாருங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம கொக்கோ பவுடரும் சோளமாவும் பாலும் வைத்து ஒரு சூப்பரான சாக்கோ மில்க் புட்டிங் செய்யப் போறோம். இந்த ரெசிபி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாரும் இந்த ரெசிபிக்கு அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
ஒரு கண்ணாடி கிண்ணத்துல இந்த புட்டிங் செஞ்சீங்கன்னா பாக்குறதுக்கு நல்லா லேயர் லேயரா சாப்பிடுறதுக்கு ஆசையா இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும் பாக்குறதுக்கும் சாப்பிடணும் அப்படின்ற ஆசையை தூண்டும். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி உங்களை செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. இதுக்கு பால் சோள மாவு கொக்கோ பவுடர் இருந்தாலே போதுமானது. செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸி.ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம்.
கொஞ்சம் செட்டாக தான் லேட் ஆகும் பிரிட்ஜ் குள்ள வச்சு நல்லா கெட்டியாக விட்டு அதுக்கப்புறம் சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு சூப்பரா இருக்கும். கடையில கிடைக்கிற புட்டிங் விட வீட்ல சூப்பராவே நம்மளால செய்ய முடியும் இந்த செய்முறையை பின்பற்றி இதே மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த ரெசிபியை சூப்பரா செஞ்சுடலாம். நீங்க நிறைய புட்டிங் ரெசிப்பி செஞ்சிருப்பீங்க ஆனா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. கண்டிப்பா டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான சாக்கோ மில்க் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரொம்பவே ஈஸியான எக் புட்டிங் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து கொதித்ததும் ஒரு கப் சர்க்கரை அரை கப் சோள மாவு கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்ததும் சர்க்கரை சோள மாவு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியானதும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் பால் கலவை அதன் மேல் சாக்லேட் கலவை என மாற்றி மாற்றி ஊற்றி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான சாக்கோ மில்க் புட்டிங் தயார்.






