- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
பொதுவா நிறைய பேருக்கு மில்க் சாக்லேட் ரொம்ப பிடிக்கும். இப்ப எல்லாரும் வீட்லையே சூப்பரா சாக்லேட் செஞ்சு சாப்பிடுறாங்க. அந்த வகையில நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச டைரி மில்க் சாக்லேட் வீட்லையே செய்ய முடியும் அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா? ஆமாங்க வீட்லயே ஒரு சூப்பரான ரொம்ப ரொம்ப சிம்பிளா டைரி மில்க் சாக்லேட் செஞ்சுடலாம். இந்த சாக்லேட் செய்யறதுக்கு குறைவான நேரங்கள் மட்டுமே போதுமானது. வெறும் நாலஞ்சு பொருள் வச்சே ஒரு சூப்பரான சாக்லேட் வீட்டிலேயே செஞ்சிடலாம். சாக்லேட் செய்யறதுக்கு நமக்கு பெருசா எதுவும் பொருட்கள் தேவைப்பட போவதில்லை பால் பவுடர் கொக்கோ பவுடர் பட்டர் இதுதான் நம்மளுக்கு தேவைப்படும்.
எல்லா வீட்டிலும் கண்டிப்பா சர்க்கரை இருக்கும் வெண்ணிலா எசன்ஸ் இருக்கும் அதனால சூப்பரா நம்ம சாக்லேட் செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே செஞ்சா சாக்லேட் கொடுக்குறதால பெருசா பாதிப்பு ஏற்படாது. பிளாஸ்டிக் கவர்ல ரொம்ப நாட்கள் ஆக சுத்தி வச்சிருக்க சாக்லேட்டை குழந்தைகளுக்கு கொடுக்கிறதுக்கு பதிலா வீட்ல செஞ்ச இந்த சூப்பரான சாக்லேட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமா செஞ்சு சாக்லேட் குழந்தைகளுக்கு டேஸ்ட்டும் பிடிக்கும் அதே நேரத்துல ஆரோக்கியமற்ற முறையில் இருக்காது.
இந்த சாக்லேட்டை குழந்தைகளுக்கு ஸ்கூல் ஸ்னாக்ஸ் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம். கடைகளில் சாக்லேட் வாங்கி சாப்பிடுறதுக்கு பதிலா வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு வச்சுகிட்டோம் அப்படின்னா குழந்தைகளுக்கு பயப்படாம நம்ம கொடுக்கலாம். இந்த சூப்பரான ஹோம் மேட் சாக்லேட்டை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. ஏன்னா இதுக்குன்னு பெருசா நம்மளுக்கு எந்த பொருட்களும் தேவைப்படாது. ரொம்ப ரொம்ப சிம்பிளாவே செஞ்சிடலாம். இந்த சூப்பரான டைரி மில்க் சாக்லேட் வீட்ல செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சிடுவீங்க.
சமைக்கவே தெரியாதவங்களுக்கு கூட இந்த சாக்லேட் சூப்பரா செய்ய வரும். சாக்லேட்னு சொன்னாலே குஷி ஆகுற குழந்தைகளுக்கு ஒரு செம ட்ரீட் அப்படின்னு சொல்லலாம். உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு இந்த சாக்லேட்டை கொடுத்து விடலாம். சாப்பிட்டு முடித்துவிட்டு டெஸர்ட்டுக்கு இந்த சூப்பரான சாக்லேட் சாப்பிட்டுக்கலாம். இத பத்து நாள் வரைக்கும் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான டைரி மில்க் சாக்லேட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க
Ingredients
Method
இது பாத்திரத்தில் பால் பவுடர் கொக்கோ பவுடர் சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வந்ததும் பட்டர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு பால் பவுடர் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கெட்டியானதும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு மணி நேரம் செட் ஆன பிறகு வெட்டி எடுத்தால் சுவையான டைரி மில்க் சாக்லேட் தயார்.






