இந்த அவசரமான உலகத்துல எல்லாருக்குமே அவசரமாக செய்ற சாப்பாடு தான் ரொம்ப பிடிக்குது. பிரைட் ரைஸ் நூடுல்ஸ் மேகி அப்டின்னு பாஸ்ட் ஃபுட் பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த வகையில ரோட்டு கடைகளில் அதிகமா கிடைக்கக்கூடிய எக் பேஜோ ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கும். ஆனா அத வீட்ல ஒரு நாளும் ட்ரை பண்ணி சாப்பிட்டு இருக்க மாட்டாங்க எப்போமே கடையில் வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா கடையில வாங்கி சாப்பிடுற அதே காசுக்கு வீட்ல நிறைய பேரு சாப்பிடலாம். அதனால வீட்ல ஒரு தடவ இந்த எக் பேஜோ ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் எல்லாத்தையும் நல்லா வறுத்து இதுல சேர்த்து சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி கஷ்டமான வேலை கிடையாது அதனால நம்ம வீட்லையே செஞ்சிடலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க எப்பவுமே ஒரே மாதிரி வடை பஜ்ஜி மிக்சர் இந்த மாதிரி கொடுக்காமல் இந்த மாதிரி எக் பேஜோ ரெசிபி வித்தியாசமா செஞ்சு கொடுத்து பாருங்க.
இது கண்டிப்பா எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்டுல ஈவினிங் ஸ்னாக்ஸ் மாதிரி செஞ்சு சாப்பிடுங்க. நிறைய ரெசிப்பிஸ் நம்ம எப்படி செய்றதுன்னு தெரியாம கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கோம் ஆனா எல்லாமே கடையிலேயே வாங்கி சாப்பிட்டா கண்டிப்பா நல்லா இருக்காது. வீட்லயும் செய்ய கத்துக்கிட்டோம் அப்படின்னா ஆரோக்கிய மாக செஞ்சு சாப்பிடலாம். இந்த சுவையான ரோட்டு கடைகளில் கிடைக்கக்கூடிய டேஸ்டான எக் பேஜோ ரெசிபியை எப்படி அதே மாதிரி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
எக் பேஜோ | Egg Bhejo Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 1/4 கப் புளி தண்ணீர்
- 1/4 கப் எலுமிச்சை சாறு
- 2 பெரிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 6 காய்ந்த மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முட்டையை வேக வைத்து இரண்டாக கீறல் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயம், பூண்டு அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு அதனுடன் வதக்கிய பெரிய வெங்காயம் பூண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- உப்பை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு வறுத்த எண்ணெயையும் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
- இரண்டாக கீறி வைத்துள்ள முட்டையில் வறுத்த வெங்காயம் பூண்டு மிளகாய் கலவையை வைத்து அதன் மேல் புளித்தண்ணீர் உப்பு கலந்த தண்ணீர் பூண்டு எண்ணெய் எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் அனைத்தும் சேர்த்து பரிமாறினால் சுவையான எக் பேஜோ தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் இது போல் செய்து பாருங்கள்!!