- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி இது எல்லாமே அடிக்கடி வீட்டுல செய்யறது. ஆனா வேர்க்கடலை சட்னி பெரும்பாலும் யாரும் செய்ய மாட்டாங்க எப்பவாவது தான் செய்வாங்க. வேர்க்கடலை சட்னி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப சிம்பிளா ஒரு வேர்கடலை சட்னி செய்ய போறோம். இந்த வேர்கடலை சட்னி இட்லி தோசைக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதை தண்ணீர் சேர்க்காமல் துவையல் மாதிரி செய்தால் லெமன் சாதம் புளி சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக சாப்பிடலாம்.
டேஸ்ட் ரொம்பவே அற்புதமான இருக்கும். வேர்க்கடலையை நல்லா வறுத்து அதுகூட தேங்காய் மிளகாய் எல்லாம் வைத்து அரைக்கும் போது ரொம்பவே சிம்பிளான துவையலா இருந்தாலும் டேஸ்டான துவையல் ஆக இருக்கும். வேர்க்கடலை வைத்து வேர்க்கடலை சாலட் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். ஆனா அந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டாங்க.
அவங்களுக்கு இந்த வேர்கடலையை வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான சட்னியை செஞ்சு கொடுங்க என்ன சட்னி அப்படின்னு கண்டுபிடிக்கவே மாட்டாங்க. இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. அவசரத்துக்கு தேங்காய் சட்னி அரைக்காம ஒரு தடவை வேர்க்கடலை சட்னி அரைச்சு பாருங்க கண்டிப்பா செம சூப்பரா இருக்கும் வீட்ல இருக்குறவங்களும் ரெண்டு இட்லி தோசை சேர்த்தே சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான வேர்கடலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் இப்படி செய்து பாருங்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!
Ingredients
Method
ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் வேர்க்கடலை, பூண்டு, காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்ததில் சேர்த்தால் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.






