- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் ஞாபகம் வந்து விடுகிறது. இனிப்பு வகைகளில் மிகவும் சுலபமாக செய்யக் கூடியது குலோப் ஜாமுன் தான். குலோப் ஜாமுன் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தின்னத் தின்ன திகட்டாத ஒரு இனிப்பு வகை குலோப் ஜாமுன். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம்.
வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் குலோப் ஜாமுன் மாவை வாங்கி தான் செய்வோம். ஆனால் இனி அந்த இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் இந்த வேர்க்கடலை மட்டும் வைத்தே ஒரு சூப்பரான சாஃப்ட்டான குலோப் ஜாமுன் செய்ய முடியும். இதை செய்வது மிகவும் சுலபம். அதோடு செம சூப்பராகவும் இருக்கும். நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம். இப்பொழுது வேர்க்கடலை குலோப் ஜாமுன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வேர்க்கடலையை சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் வறுத்த வேர்க்கடலை மற்றும் முந்திரியை பாலில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் இந்த விழுதை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மைதா, ஏலக்காய் தூள், கேசரி பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின் குலாப் ஜாமூன் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
பின் இந்த உருண்டைகளை சர்க்கரை தண்ணீரில் சேர்த்து, நன்கு ஊறியதும் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை குலாப் ஜாமூன் தயார்.






