பொதுவா இனிமேல் சளி வந்தது அப்டினா நம்ம இஞ்சி போட்டு கஷாயம் வச்சு குடிப்போம். இல்லனா தூதுவளை துளசி கற்பூரவள்ளி வெற்றிலை இதெல்லாம் போட்டு கஷாயம் வச்சு குடிச்சிருப்பீங்க. ஆனா குழந்தைகளுக்கு இருமல் சளி வரும் போது அவங்களுக்கு இந்த கஷாயம் கொடுத்தா கண்டிப்பா குடிக்கவே மாட்டாங்க. அவங்களுக்காகவே ஒரு சூப்பரான இஞ்சி முட்டாய் வீட்லயே செஞ்சு கொடுங்க. இந்த இஞ்சிமிட்டாய் ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். குட்டி குட்டியா இந்த இஞ்சி மிட்டாய் செஞ்சு ஒரு டப்பால போட்டு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டா 10 20 நாளைக்கு கூட அத அப்படியே கெட்டுப் போகாம இருக்கும்.
பெரியவங்களுமே அப்பப்போ ஒரு மிட்டாய் எடுத்து வாயில போட்டு சாப்பிடுவது மூலமா சளி இருமல் குறையும். இந்த இஞ்சி மிட்டாய் இருமல் சளிக்கு மட்டுமில்லாமல் செரிமானத்துக்கும் ரொம்ப உதவியாக இருக்கும். அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்லையே செஞ்சு வச்சுக்கோங்க வெளியில் கடைகளில் போய் வாங்க வேண்டாம் அவங்க எப்படி செஞ்சுருப்பாங்க அப்படின்னு நமக்கு தெரியாது வீட்டிலேயே நம்ம பிரஷ்ஷான இஞ்சி எடுத்து ஒரு அரை மணி நேரத்துல சூப்பரா இஞ்சி மிட்டாய் செஞ்சிடலாம்.
இதுல இனிப்புக்கு வெல்வம் சேர்க்கிறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இனிப்பு விரும்பி சாப்பிடுற குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுங்க. இந்த மழைக்காலத்துல இந்த மிட்டாய்யா செஞ்சு வீட்டுல வச்சுக்கிட்டீங்க அப்படின்னா தொண்டை கரகரன்னு இருந்தாலே இந்த மிட்டாய் எடுத்து வாயில் போட்டு சப்பி சாப்பிடுங்க. இருமலை வராது. அதுக்கு முன்னாடியே நம்ம இருமலை தடுக்க முடியும். இப்ப வாங்க இந்த சுவையான இஞ்சி மிட்டாயை கடைகளில் போய் வாங்காம வீட்டிலேயே சூப்பரா செஞ்சு சாப்பிடுறதுன்னு பார்க்கலாம்.
இஞ்சி மிட்டாய் | Inji Mittai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி இஞ்சி
- 100 கி வெல்லம்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டீஸ்பூன் நெய்
செய்முறை
- இஞ்சியை துருவி ஒரு கடாயில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தட்டிய வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பத்து நிமிடம் நன்றாக கிளறிய பிறகு மிளகு தூள் ஒரு சிட்டிகை உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 10 நிமிடத்திற்குப் பிறகு ஒரு தட்டில் நெய் தடவி அதன் உங்களுக்கு தேவையான வடிவத்தில் அந்த இஞ்சி சாற்றை ஊற்றி ஆறியதும் எடுத்தால் சுவையான இஞ்சி மிட்டாய் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!