- Advertisement -
கமர்கட் தேங்காய், மற்றும் வெல்ல பாகினால் செய்யப்படும் சுவையான ஸ்வீட் ரெசிபி குழந்தைகளுக்கு வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேணடும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?
- Advertisement -
அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறத்துவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையில் கமர்கட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
-விளம்பரம்-
கமர்கட் | Kamarkat Recipe In Tamil
கமர்கட் தேங்காய், மற்றும் வெல்ல பாகினால் செய்யப்படும் சுவையான ஸ்வீட் ரெசிபி குழந்தைகளுக்கு வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 2 கப் தேங்காய் துருவல்
- ½ கப் பாகு வெல்லம்
- நெய் சிறிதளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் வெள்ளத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும். பிறகு அதில் சிறிது எடுத்து அறியபிறகு உருட்டி பார்க்கும் போது உருட்ட வந்தால் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- செய்து வைத்த கலவை சூடாக இருக்கும் போதே, கையில் நெய் தொட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.
- இப்பொழுது சுவையான கமர்கட் தயார்.
Nutrition
Carbohydrates: 11g | Protein: 0.4g | Fat: 3g | Fiber: 1g