Advertisement
Uncategorized

மணமணக்கும் ருசியான நாட்டுபுற கதம்ப சாம்பார் இப்படி செய்து பாருங்க!

Advertisement

நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். சிக்கன் போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இந்ந சாம்பார். நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில்

இதையும் படியுங்கள் : அய்யர் வீட்டு சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?

Advertisement

வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது நாட்டுபுற ஸ்டைல் சாம்பார் ஆம், இன்று நாம் நாட்டுபுற கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த நாட்டுபுற கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த நாட்டுபுற கதம்ப சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நாட்டுபுற கதம்ப சாம்பார் | Nattupura Kathampa Sambar Recipe in Tamil

Print Recipe
சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இந்ந சாம்பார். நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது நாட்டுபுற ஸ்டைல் சாம்பார் ஆம், இன்று நாம் நாட்டுபுற கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த நாட்டுபுற கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword sambar, சாம்பார்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 321.8

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய், வாழைக்காய் கலந்து எடுத்து கொள்ளவும்
  • 3 tbsp எண்ணெய்
  • 2 தக்காளி நறுக்கியது
  • ¼ கப் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு
  • 100 கிராம் துவரம் பருப்பு வேக வைத்தது
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 3 tbsp சாம்பார் பொடி
  • 100 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது
  •  உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிது
  • கொத்தமல்லி சிறிது

தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு உளுந்த பருப்பு
  • ¼ tsp பெருங்காய தூள்
  • வெந்தயம் சிறிது
  • 2 வர மிளகாய்

Instructions

  • முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கால் கப் அளவு தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் புளியை கரைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளுங்கள்
  • பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிகரைசலை சேர்த்து
    Advertisement
    அதனுன் மேலும் ஒரு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி. அதில் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேக வையுங்கள்
  • பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்று, எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி வெந்து நன்கு மசிந்து வந்ததும். நாம் வேக வைத்த காய்கறியை தண்ணீருடன் சேர்க்கவும்.
  • பின் இதனுடன் சாம்பார் பொடி மற்றும் வேக வைத்து மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் ஊற்று விளாவி இதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து.
  • அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு சேர்த்து கடுகு பொரிந்தவுடன், கால் டீஸ்பூன் பெருங்காய தூள், சிறிது வெந்தயம், இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதன் பின்பு தாளிப்பை கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு சாம்பார் நன்கு கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான நாட்டுபுற கதம்ப சாம்பார் தயார்.

Nutrition

Serving: 700gram | Calories: 321.8kcal | Carbohydrates: 45g | Protein: 31g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 6mg | Sodium: 5mg | Potassium: 428mg | Fiber: 6.8g | Sugar: 1.5g | Vitamin A: 13IU | Calcium: 10mg | Iron: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

8 நிமிடங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

4 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

13 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

17 மணி நேரங்கள் ago