சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில் கோவைக்காய் வாடை கொஞ்சம் கூட இல்லாமல் சுவையாக செய்ய முடியும். சட்னி அரைக்க ஒன்று தேங்காய் பயன்படுத்துவோம் அல்லது தேங்காய் சேர்க்காமல் அதற்கு பதில் வெங்காயம்
இதையும் படியுங்கள் : ஆந்திர ஸ்பெஷல் அல்லம் பச்சடி (இஞ்சி சட்னி) இப்படி செஞ்சி பாருங்க!
அல்லது வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கும் சட்னி இப்படி வித விதமாக செய்வோம், ஆனால் கோவைக்காய் வைத்து சட்னி சுவையாக செய்ய முடியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவைக்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கோவைக்காய் சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கிராமத்து கோவைக்காய் சட்னி | Kovaikkai Chutney Receipe in Tamil
Equipment
- 1` மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 100 gm கோவைக்காய்
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 3 காய்ந்த மிளகாய்
- 1 புளி நெல்லிக்காய் அளவு
- 10 கறிவேப்பிலை
- 1 tbsp எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- கோவைக்காய் செய்ய முதலில் கோவைக் காயை வில்லை வில்லைகளாக நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
- பின்னர் அதே வாணலியில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி ஜாரில் போட்டதும், நறுக்கிய கோவைக்காயைப் போட்டு வதக்கி ஜாரில் போடவும்.
- பின்னர் மிக்சி ஜாரில் புளி, உப்பு, சிறிது கறிவேப்பிலை போட்டு அரைக்கவும்.
- பொதுவாக தண்ணீர் விட வேண்டாம், கோவைக்காயில் உள்ள நீரே சட்னிக்கு சரியாக இருக்கும்.நன்கு அரைந்ததும் எடுத்தப் பரிமாறலாம்.