இட்லி தோசைக்கு ஏற்ற மாங்காய் சட்னி செய்வது எப்படி ?

- Advertisement -

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நெருப்பில் சுட்ட சுவையான மங்காய் சட்னி செய்வது எப்படி ?

- Advertisement -

தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, போன்றவற்றை செய்து செய்து சலித்து விடும். அதனால் ஒரு முறை இந்த மாங்காய் சட்னி செய்து ருசித்து வீடுகள் அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இதை எப்படி எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள் குடுத்துளோம் அதனை நன்றாக படித்து பார்த்து செய்து பாருங்க.

Print
No ratings yet

மாங்காய் சட்னி | Mango Chutney Recipe In Tamil

தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும். தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, போன்றவற்றை செய்து செய்து சலித்து விடும். அதனால் ஒரு முறை இந்த மாங்காய் சட்னி செய்து ருசித்து வீடுகள் அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Mangai Chutney, மாங்காய் சட்னி
Yield: 4 people
Calories: 252kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய் பெரியது
  • ½ கிண்ணம் தேங்காய் துருவல்
  • 8 மிளகாய் வற்றல்
  • 1 தேக்கரண்டி பெருங்காயப்பொடி
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • 1 தேக்கரண்டி கடுகு
  • ½ ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை

  • முதலில் தேங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • பிறகு மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து பிறகு அதை அரைத்த மாங்காய் சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  • இப்பொழுது சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.

Nutrition

Serving: 200gram | Calories: 252kcal | Carbohydrates: 4g | Protein: 14g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Sodium: 5mg | Potassium: 365mg | Fiber: 1g | Sugar: 0.2g | Vitamin C: 2mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here