நம்ம பொதுவா கடைகளில் நிறைய சாட் ஐட்டம் வாங்கி சாப்பிட்டு இருப்போம். பானி பூரி, மசால் பூரி, சமோசா மசாலா, காளான் மசாலா தாகி பூரி அப்படின்னு நிறைய ஐட்டங்கள் நமக்கு கிடைக்கும் அந்த வகையில அதே மாதிரி சுவையில் இருக்கக்கூடிய மசாலா பன் ரெசிபி தான் இன்னைக்கு நம்ம செய்ய போறோம். இந்த மசாலா பன் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப சூப்பரா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு வர்ற குழந்தைகளுக்கு இந்த ரெசிபி செஞ்சு குடுங்க சாப்பிட்டுட்டு சமத்தா உட்கார்ந்து படிப்பாங்க. அவங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்குமே இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும்.
வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே இது ஒரு ஃபேவரட்டான ரெசிபியாக மாறிடும். இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. டேஸ்ட் ரொம்பவே தரமா பக்காவாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க. சாப்பிட்டுட்டு கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க. இந்த மழைக்காலத்துக்கு சுட சுட இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா சாப்பிடுவதற்காக அவ்வளோ ருசியா இருக்கும்.
மாலை நேரத்துல டீ, காபியோட இந்த ரெசிபியை சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த மசாலா பன் ரெசிபி இதுவரைக்கும் யாருமே செஞ்சிருக்கவே மாட்டீங்க. ஒரு தடவை செஞ்சு பாருங்க இதுல கேரட் வெங்காயம் தக்காளி எல்லாமே போட்டு செய்வோம். ஆனா எல்லாமே பாதி வதங்கினா மட்டுமே போதுமானது முழுசா மசிய வதக்க கூடாது. காரத்துக்கு பச்சை மிளகாயும் கரம் மசாலா சேர்த்தா போதும். இதை காலைல பிரேக் பாஸ்டா கூட சாப்பிடலாம். ரொம்பவே வயித்துக்கு பில்லிங்கா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மசாலா பன் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
மசாலா பன் | Masala Bun Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 பன்
- 2 பெரிய வெங்காயம்
- 2 கேரட்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 4 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.
- தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் சிறிதளவு உப்பு கரம் மசாலா சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கினால் போதுமானது.
- ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
- இறுதியாக பன்னை நான்கு துண்டுகளாக வெட்டி சேர்த்து பத்து நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான மசாலா பன் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சில்லி பன்னீர் மேகி இப்படி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!