- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் நம்மிடம் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். அந்த சமயம் நாம் எப்பவும் ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், வடை, பிரெட் ஆம்லெட் அப்படின்னு தான் செய்து கொடுப்போம். ஆனால் அதை எப்போதும் சாப்பிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா? அதனால் இனிமேல் உங்களிடம் ஸ்னாக்ஸ் வேணும்னு கேட்டால் கொஞ்சம் வித்தியாசமா வட மாநில ஸ்பெஷலான மிஷ்டி டோய் செய்து கொடுங்கள். அப்படி நான் என்னவென்று யோசிக்கிறீங்களா அது ஒன்றுமில்லை இது பால் மற்றும் தயிர் வைத்து செய்யக் கூடிய ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
நீங்க நினைத்து பார்க்காத அளவிற்கு ஒரு ருசியை இந்த மிஷ்டி டோய் உங்களுக்கு கொடுக்கும். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் தான் மிகவும் குறைந்த பொருட்கள் வைத்து சட்டுன்னு செய்து முடித்து விடலாம். இந்த இனிப்பு ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கும் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மிஷ்டி டோய் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான வட இந்திய ஸ்பெஷல் ஆலு பராத்தா இப்படி செஞ்சி பாருங்க! இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!
Ingredients
Method
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுத்து கொள்ளவும்.
பின் வெல்லப்பாகுவை காய்ச்சிய பால் நன்கு ஆறியதும் சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள், ரோஜா இதழ், குங்குமப்பூ, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு மண் பானையில் சுற்றி தயிர் தடவி நாம் செய்து வைத்த கலவையை ஊற்றி பிரிட்ஜில் வைத்து நான்கு மணி நேரம் கழித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மிஷ்டி டோய் தயார்.






