ஆரோக்கிய வாழ்விற்கு காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் ?

- Advertisement -

இப்போது சில ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக பலர் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டார்கள். இன்றைய நவீன காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நம்மில் பல பேர்
அப்பொழுது சற்று நின்னு நாம் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். தற்போது சில ஆண்டுகளாக பலர் அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக எல்லா முயற்சியும் செய்து வருகின்றனர். உதாரணமாக பவர் முழு இயற்க உணவு பொருட்களை தேர்வு செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?

- Advertisement -

என்றாலும் எதை எதை எப்போது முறையாக சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை யாருக்கும் இருக்காது. சில பொருட்களை தவறான சமயத்தில் உட்கொண்டால் நம் உடலுக்கு பல உவாமைகள் வரும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக காலையில் வெறும் வயிற்றில் நாம் சில பொருட்களை எடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அப்படி காலையில் உடல் ஆரோக்கியத்திற்காக சில பானங்கள் நாமே வீட்டில் தயார் செய்து குடிக்கலாம் என்னென்ன பானங்கள் தயார் செய்யலாம், தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

பாலக்கீரை பானம்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 2
பாலக்கீரை – 1 கப்
இளநீர் – 1 கப்
பேரிச்சை – 3

செய்முறை

இரவு தூங்குவதற்கு முன்னாடியே வாழைப்பழத்தை ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

காலையில் எழுந்து அந்த வாழைப்பழத்தை எடுத்து நறுக்கி அதனுடன் பேரிச்சை, பாலக்கீரை, மற்றும் இளநீர் போன்ற பொருட்களையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் ஐஸ் போட்டு குடிப்பீர்கள் என்றால் ஐஸ் போட்டுக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அப்படியே குடிக்கலாம்.

இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

-விளம்பரம்-

காய்கறி பானம்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை – 1 கப்
புதினா இலை – 1/2 கப்
மல்லி – சிறிது
தனியா – சிறிது
கருவேப்பிலை – சிறிது
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – 1/2 கப்
புடலங்காய் – 2 டீஸ்பூன்
அண்ணாச்சி – 1/2 கப்
எலுமிச்சை பழம் – 1
பேரிச்சை – 3

செய்முறை

பானம் தயாரிப்பதற்காக நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் தோல் சீவ வேண்டி இருந்தால் தோலை சீவிக் கொள்ளுங்கள்

பின் அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்ததுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் அரிப்பை எடுத்து வேறு பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.

பின் ஐஸ் போட்டு குடிப்பீர்கள் என்றால் ஐஸ் போட்டு குடியுங்கள் இல்லையென்றால் அப்படியே கூட குடியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here