சுவையான பன்னீர் மோமோஸ் கடைகளில் வாங்காமல் இனிமேல் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

- Advertisement -

மோமோஸ் அப்படின்ற ரெசிபியை கொழுக்கட்டை அப்படின்னு கூட சொல்லலாம். கொழுக்கட்டையில நம்ம பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி இனிப்பா வச்சு சாப்பிட்டிருப்போம். ஆனா இந்த மோமோஸ் குள்ள காரமா ஏதாவது ஒரு ஸ்டஃபிங் வச்சு சாப்பிடுவோம், அவ்வளவு தான் ரெண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம். சிக்கன் மோமோஸ், மஸ்ரூம் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ் அப்படின்னு நிறைய வகைகள் இருக்கு இதுலையே அந்த மோமோஸ் செஞ்சு அதை அப்படியே பொரிச்சு கூட எடுத்து தருவாங்க. ப்ரைடு மோமோஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த மோமோஸ் ரெசிபிக்கு தக்காளி சாஸ் வச்சு சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும் ஒரு சிலர் மயோனைஸ் கூட வச்சு சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

எப்பவுமே மோமாஸ் கடையிலேயே வாங்காமல் ஒரே ஒரு தடவை வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் கடையில போய் வாங்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு வீட்டிலேயே சூப்பரா கடையை விட அற்புதமா செய்யலாம். இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. அந்த வகையில் இன்னைக்கு நம்ம பன்னீர் வச்சு செய்யக்கூடிய பன்னீர் ஸ்டஃப்டு மோமோஸ் தான் செய்யப் போறோம். இந்த மோமோஸ் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகி இருப்பாங்க அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு வீட்டிலேயே மோமோஸ் ரெசிபி செஞ்சு கொடுத்தா சொல்லவா வேணும் கொடுக்க கொடுக்க சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க.

- Advertisement -

அந்த மாதிரி மோமோஸ் பிரியர்களுக்கு ஒரு தடவை இந்த பன்னீர் மோமோஸ் செஞ்சு கொடுங்க. கூடவே கொஞ்சமா தக்காளி சாஸ் வச்சு கொடுத்தீங்கன்னா அப்படியே ரெஸ்டாரண்ட்ல சாப்பிடற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். இந்த சுவையான மோமோஸ் ரெசிபிக்கு கேரட் குடைமிளகாய் அப்படின்னு நிறைய சேர்த்து செய்ய போறதால இது ஆரோக்கியமானதும் கூட ஆவில வச்சு வேக வச்சு சாப்பிடும்போது எந்த உணவா இருந்தாலும் அது ஆரோக்கியமானது தான்.

அப்படி இருக்கும் போது காய்கறிகள் பன்னீர் எல்லாமே சேர்த்து வச்சு சாப்பிடும்போது இன்னும் ஆரோக்கியமானதாவே இருக்கும். மோமோஸ்யை ஃப்ரைடு மோமோஸ் ஆக சாப்பிடுவதை விட ஆவியில் வேகவச்சு அப்படியே சாப்பிடுறதா ரொம்ப நல்லது. குழந்தைகளுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால அவங்க ஸ்கூல் விட்டு வரும்போது சர்ப்ரைஸா இது செஞ்சு கொடுத்து அசத்துங்க. அவ்ளோ சூப்பரா இருக்கும் குழந்தைகளும் ஜாலியா சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் ஸ்டஃப்டு மோமோஸ் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

Print
No ratings yet

பன்னீர் மோமோஸ் | Paneer Momos Recipe In Tamil

மோமோஸ் அப்படின்ற ரெசிபியை கொழுக்கட்டை அப்படின்னு கூட சொல்லலாம் கொழுக்கட்டையில நம்ம பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி இனிப்பா வச்சு சாப்பிட்டிருப்போம் ஆனா இந்த மோமோஸ் குள்ள காரமா ஏதாவது ஒரு ஸ்டஃபிங் வச்சு சாப்பிடுவோம் அவ்வளவுதான் ரெண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம்.சிக்கன் மோமோஸ் மஸ்ரூம் மோமோஸ் வெஜிடபிள் மோமோஸ் அப்படின்னு நிறைய வகைகள் இருக்கு இதுலையே அந்த மோமோஸ் செஞ்சு அதை அப்படியே பொரிச்சு கூட எடுத்து தருவாங்க. ப்ரைடு மோமோஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த மோமோஸ் ரெசிபிக்கு தக்காளி சாஸ் வச்சு சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும் ஒரு சிலர் மயோனைஸ் கூட வச்சு சாப்பிடுவாங்க. எப்பவுமே மோமாஸ் கடையிலேயே வாங்காமல் ஒரே ஒரு தடவை வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் கடையில போய் வாங்கவே மாட்டீங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, Snack
Cuisine: Indian
Keyword: Paneer Momos
Yield: 4 People
Calories: 122kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 50 கி பன்னீர்
  • துருவிய கேரட் சிறிதளவு
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சிறிதளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 கப் மைதா மாவு
  • 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கியதும் வெங்காயத்தாள் சில்லி சாஸ் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய குடை மிளகாய் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கியும் துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறியதாக உருட்டி அதனால் செய்து வைத்துள்ள கலவையை வைத்து மோமோஸ் போன்று மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான மோமோஸ் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 122kcal | Carbohydrates: 3.2g | Protein: 16g | Fat: 2.5g | Sodium: 54mg | Potassium: 184mg | Vitamin A: 90IU | Vitamin C: 167mg | Calcium: 19mg | Iron: 11mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சூப்பரான பன்னீர் சில்லி ப்ரை இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

-விளம்பரம்-