- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
குழிப்பணியாரம், நெய் பணியாரம், கருப்பட்டி பணியாரம், வெள்ளை பணியாரம், கார பணியாரம் அப்படின்னு நிறைய பணியாரம் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் பன்னீர்ல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கிறதால சைவ உணவு சாப்பிடுறவங்க அதிகமா பன்னீர் சேர்த்துக்கிட்டா உடம்பில் புரோட்டின் சத்துக்கள் அதிகரிக்கும். அதனால இனிமேல் புரோட்டின் சத்துக்கள் கம்மியா இருக்குன்னு சொன்னாங்கன்னா மற்ற காய்கறிகளோடு சேர்த்து பன்னீரும் அடிக்கடி சேர்த்துக்கோங்க.
அந்த பன்னீர் வச்சு நீங்க பன்னீர் பிரியாணி பன்னீர் கிரேவி பன்னீர் பட்டர் மசாலா என்று ஒரே மாதிரியா செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும் இந்த டேஸ்டான அருமையான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு எப்பவுமே ஒரே மாதிரியாக சாதமே கொடுக்காமல் இந்த மாதிரி டிஃபரண்டான ரெசிப்பீஸ்ஸூம் செஞ்சு குடுங்க குழந்தைகள் கண்டிப்பா மிச்சம் வைக்காம சாப்பிட்டு வருவாங்க.
இந்தப் பணியாரத்துக்கு எந்த ஒரு சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது. காலைல பிரேக் பாஸ்ட்டுக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் மதியம் லஞ்ச் பாக்ஸுக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் நைட் டின்னருக்கும் கூட கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடு வாங்க பெரியவங்க மட்டும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கும் டின்னருக்கும் இதை செஞ்சு சாப்பிடுங்க ஸ்னாக்ஸா கூட இதை செஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான சூப்பரான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சூப்பரான பன்னீர் சில்லி ப்ரை இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
உப்பு, மிளகாய் தூள் கரம் மசாலா, சீரகத்தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பன்னீரை உதிர்த்து சேர்த்து நன்றாக வதக்கவும்.
கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து சிறிதளவு மாவு ஊற்றி பன்னீர் உருண்டைகளை மேலாக சேர்த்து மறுபடியும் மாவு சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் தயார்.






