- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- sweets
தீபாவளிக்கு ஸ்வீட் செய்யும் போது நிறைய நேரம் சமையலறையில் நின்னு ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய ஸ்வீட் செஞ்சுருப்போம். முறுக்கு, அதிரசம், சீடை, குலாப் ஜாமுன் அப்படினு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் இருக்கு. ஆனா இன்னைக்கு நம்ம செய்யப் போற இந்த வீட்டுக்கு அடுப்பே பத்த வைக்க தேவையில்லை. பால் காய்ச்ச மட்டும் அடுப்பை பத்த வச்சா போதும். மற்ற எதுக்குமே நீங்க அடுப்பு பத்த வச்சு ரொம்ப நேரம் அடுப்பில் நின்னு செய்யணும் அப்படின்ற அவசியம் இல்ல. அந்த மாதிரி ஒரு ஸ்வீட் ரெசிபி தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம். இந்த ஸ்வீட் ரெசிபி செய்றதுக்கு நமக்கு குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது.
வீட்ல ஆயுத பூஜைக்கு வாங்கின பொறி மீதம் இருந்துச்சுன்னா அத வச்சு ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம். இது காஜு கட்லி ஸ்வீட் ரெசிபி மாதிரியே இருக்கும். ஆனா இதுக்கு நிறைய முந்திரி பருப்பு சேர்க்க தேவையில்லை குறைவான அளவில் முந்திரி பருப்பு மட்டுமே சேர்த்து செஞ்சா போதுமானது. நாலு பொருள் மட்டுமே வச்சு இந்த ரெசிபியை சூப்பரா டேஸ்டா செஞ்சு முடிச்சிடலாம். இந்த ரெசிபி வாயில வச்ச உடனே கரைஞ்சு போயிடும் அந்த அளவுக்கு டேஸ்டா ஸ்வீட்டா இருக்கும்.
அந்த மாதிரியான ஒரு ரெசிபியை உங்க வீட்டுல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. ஒரு பத்து நிமிஷத்திலேயே நம்ம இந்த ஸ்வீட்ட செஞ்சுரலாம். இதுக்காக நிறைய கஷ்டப்படணும் அப்படின்னு தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு சூப்பரான பொறி வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபியை மறக்காம இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான சிம்பிளான ஸ்வீட்டான தீபாவளி ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த கடலை மாவு ஸ்வீட் ஒரு தடவ உங்க வீட்ல சிம்பிளா செஞ்சு பாருங்க!
Ingredients
Method
பொறி மற்றும் முந்திரிப் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காயையும் பொடியாக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
பால் சேர்த்து அனைத்தையும் கெட்டியாக பிசைந்து நெய் சிறிதளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய் சேர்த்து நன்றாக தடவிய பிறகு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மாவை நன்றாக விரித்துவிட்டு அதன் மேல் பிஸ்தா பருப்பை தூவி விட்டு தேவையான வடிவத்தில் நறுக்கி எடுத்தால் சுவையான ஸ்வீட் தயார்.






