- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ஸ்வீட் சிறுதானியம் வைத்து செய்யப்படுவதால் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் ஆக இருக்கும். அல்வா என்று சொன்னால் யாருக்கு தான் நாக்கில் எச்சில் ஊறாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று அல்வா. ஆனால் இதை சில உடல்நல பிரச்சனைகளால் சிலர் ஒதுக்கி விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சத்தான கேழ்வரகு வைத்து எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அல்வா செய்வது என்று தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் ஒன்றாக ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது. இவை நீரழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. சிறுதானியங்களைக் கொண்டு அல்வா மட்டுமில்லாமல், பிரவுனி, லட்டு, கேக், இனிப்பு பணியாரம் மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள இந்த கேழ்வரகு அல்வாவை சாப்பிடலாம். இந்த அல்வா குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் முதியவர்களுக்கும் ஏற்றவை தான்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!
Ingredients
Method
முதலில் கேழ்வரகை சுமார் 10 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து இதன் பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். சர்க்கரை கரைந்ததும் கேழ்வரகு பாலை சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
பின் இது அல்வா பதத்திற்கு வந்ததும் சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து கேழ்வரகு அல்வாவில் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு அல்வா தயார்.






