சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து கோலா உருண்டை எப்படி செய்வதென்று காண உள்ளோம். இதை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் இந்த ராஜ்மா உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவாக செய்து கொடுத்தால் நல்லது தானே. மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், இந்த ராஜ்மா கோலா உருண்டை செய்து கொடுங்கள். இந்த ராஜ்மா கோலா உருண்டை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம்.
ராஜ்மா கோலா உருண்டை | Rajma Kola Urundai Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ராஜ்மா
- 1 பெரிய வெங்காயம்
- 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ராஜ்மாவை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் ஊற வைத்த ராஜ்மாவை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
- பின் பொட்டு கடலை மாவு, நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் இந்த கலவையை கொஞ்சம் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளாக உருட்டி வைத்த கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ராஜ்மா கோலா உருண்டை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!