இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்!

- Advertisement -

நம் உடலில் முக்கிய பாகம் எது என்று யாரிடம் கேட்டாலும் இதயம் என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இதயம் நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்பு. நம் உடலுக்கு உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பவும் ஒரு முக்கியமான வேலையை இதயம் செய்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அது எப்போது வேண்டுமானாலும் நம் உயிர் பறிக்கும் அபாயம் உள்ளது.

-விளம்பரம்-

நம் உடல் உறுப்பில் சில உறுப்புகள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது இருந்தாலும் அவற்றில் பாதிப்புகள் ஏதேனும் வந்தால் அது சரி செய்து விடலாம் இல்லை அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தடுத்துவிடலாம் ஆனால் இதயம் அப்படி இல்லை அதனால்தான் நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு உணவு பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சிகள், யோகா என்று செய்து வருகின்றோம். என்னதான் இதயம் ஆரோக்கியமாக இருக்க இது போன்ற உடற்பயிற்சி யோகா என்று செய்தாலும் சில விஷயங்களில் நம் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியாமலே செய்கின்றோம். அப்படி இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை இன்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள்

முதலில் நாம் இதயத்திற்கு பெரும் அபாயத்தை விளைவிக்க கூடியது நம் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது. ஆம், நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களின் கல்லீரல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இந்த கொழுப்பு ரத்த நாளங்களுக்குள் படிப்படியாக படிந்து கடைசியில் ஒரு நாள் ரத்தம் செல்வதை முற்றிலுமாக அடைத்து விடும். இதனால் நம் இதயத்தை பாதிக்கும்
ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் வரும் ஆகையால் இனி பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சத்து நிறைந்த பழங்கள் சத்தான காய்கறிகள் என்ன சாப்பிட்டு இதயத்தின் ஆரோக்கியத்தை பலப்படுத்துங்கள்.

உடல் உழைப்பு

இன்றைய காலகட்டங்களில் பலர் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறோம் என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கணினியின் முன் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உடல் உழைப்பு இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டே இருந்தால் உடலில் பல இடங்களில் விரைப்பு ஏற்படும். மேலும் நம் உடலில் ஓடும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் ஆகையினால் உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள் காலையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.

புகை பிடித்தல், மது அருந்தல்

புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற விஷயங்களை நீங்கள் செய்யும் பொழுது அது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் இதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதினால் உங்களின் இதயத்தின் வயதும் குறைந்து கொண்டே போகிறது. ஒரு ஆய்வின்படி புகை பிடிப்பவர்கள், மது குடிப்பவர்கள் அதிகப்படியான இதய நோய்களை சந்திக்கிறார்கள் சென்று புள்ளி விவரம் கூறுகிறது.. ஆகையால் இன்றோடு புகைபிடிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

நல்ல தூக்கம்

நாம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்று. ஆறு மணி நேரங்களுக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். நாம் எந்த அளவுக்கு நன்றாக உறங்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பல் துலக்குதல்

நீங்கள் பல் துலக்குவதை சரியாக செய்யாமல் இருந்தால் அது கூட உங்கள இதயத்திற்கு கேடு விளைவிக்கும். ஆம், நீங்கள் சரியாக பல் துலக்காமல் இருக்கும் பொழுது உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய் வழியாக ரத்தத்துடன் கலந்து விடும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது முடிந்தவரை ஒரு நாளைக்கு இரண்டு தடவை பல் துலக்குவது மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here