கர்ப்பிணி பெண்கள் தவிர்க்ககூடாத உடல் அறிகுறிகள் என்னென்ன ?

- Advertisement -

ஒரு பெண் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாக கருதுவது கர்ப்பமாக இருக்கும் அந்த காலகட்டத்தை தான் ஏனென்றால் ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்த பின் தான் முழுமையான பெண்ணாக மாறிகிறால் என்ற உணர்வு இருக்கம். மேலும் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் மூகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும் ஆனால் இந்த கர்ப்ப காலகட்டத்தில் தான் அவர்களுக்கு சுமையும் அதிகமாக இருக்கும். ஆம், சுமை என்பது அவர்களுக்கு குழந்தை அல்ல அவர்களுக்கு உடல் ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் தான். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப கால கட்டத்தில் பல நோய்த தொற்றுகளால் அவதிப்படுவார்கள். இது போன்ற பலவிதமான உடல் குறைபாடுகளும் பெண்களுக்கு ஏற்படும். இது பெண்களை மட்டும் பாதிக்காமல் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை பாதிக்கும் வகையில் ஏற்படும் ஏன் உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடும். இந்த கர்ப்ப காலகட்டத்தில் சில அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டும் அது என்னென்ன அறிகுறிகள் என்பதை இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் குடிக்க வேண்டிய பழச்சாறுகள்!

- Advertisement -

இரத்த பரிசோதனை

பெண்கள் கர்ப்பம் தரித்து மூன்று மாத காலங்களில் தன்னிச்சையான கரு கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். தன்னிச்சையான கருக்கலைப்பை தவிர்ப்பதற்கு மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டும். ஏனென்றால் தாயின் ரத்தம் நெகட்டிவ் வகையாகவும், தந்தையின் ரத்தம் பாசிட்டி வகையுாகவும் மாறுபட்ட இரத்த வகையில் இருந்த குழந்தையின் இரத்த வகை பாசிட்டிவ்வாக உள்ள சூழ்நிலையில் ஆன்டிபாடிக்கள் உருவாகி பிரசவ நேரத்தில் பிரச்சனையாக ஏற்படக்கூடும். எனவே பெற்றோர்கள் இருவரும் மாறுப்பட்ட இரத்த வகைகளை சார்ந்தவராக இருந்தால் ஆன்டிப்பாடிக்களை கண்டறிய இரத்த பரிசோதனை செய்து கொள்வது மிகச் சிறந்தது.

ரத்த போக்கு

பெண்களின் கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் கருப்பையில் அம்னோடிக் என்ற திரவம் உற்பத்தியாகும். இந்த திரவத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் பாலிஹைட்ராம்னியோஸ் என்ற பிரச்சினையும் மற்றும் குழந்தை கருப்பையில் உள்ள அம்னோடிக் திரவத்தை குடிப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒலிகோஹைட்ராம்னியோஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இதனை நாம் முதலிலேயே அறிகுறிகளை வைத்து கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் இதனால் உயிரிழப்பு ஏற்படகூட வாய்ப்புள்ளது.

குமட்டல், வாந்தி

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலகட்டங்களில் அவர்களுக்கு குமட்டல் வாந்தி போன்றவை பொதுவாக வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான். ஆனால் அளவுக்கு அதிகமாக குமட்டல், வாந்தி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இது நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

-விளம்பரம்-

தடுப்பூசி

கர்ப்பிணி பெண்களுக்கு ஹைப்பேட்டிஸ், எச்ஐவி, சிபிலிஸ், காசநோய் போன்ற நோய்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலத்திலேயே இதற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்வது தாயும் குழந்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

தொற்று நோய்

கர்ப்பிணி பெண்களின் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று, பிற வைரஸ் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றுகளையும் முன்னதாகவே கண்டறிந்து அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்வது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here