- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் கார்ன் வைத்து செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கார்ன் இருந்தால், அதைக் கொண்டு மசாலா கார்ன் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் இந்த மசாலா கார்ன்னும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள்.
பொதுவாக எந்த மசாலா உணவுனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர். அப்படிப்பட்ட மசாலா வகையில் ஒன்றான மசாலா கார்ன் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். பொதுவாக கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க கார்ன் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது. கார்ன் சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது.
இதில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் கண்டதையும் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். வாருங்கள் இப்போது சுவையான மசாலா கார்ன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் கார்னை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதனுடன் சோள மாவு, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா சேர்த்த கார்ன்னை எண்ணையில் சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் பொரித்து வைத்துள்ள கார்னை சேர்த்து அதனுடன் தக்காளி சாஸ், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மசாலா கார்ன் தயார்.






