- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
முந்திரி கொத்து ரெசிபி நிறைய பேர் வீட்ல அடிக்கடி செஞ்ச சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலர் வீட்ல முந்திரி கொத்து இதுவரைக்கும் செஞ்சிருக்கவே மாட்டாங்க. ஆனா ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான சுவையான பாரம்பரியமான ஒரு ரெசிபி தான் இந்த முந்திரிக்கொத்து. இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல இந்த முந்திரி கொத்து செஞ்ச அசத்துங்க இதுவரைக்கும் உங்க வீட்ல முந்திரிக்கொத்து செஞ்சதே இல்ல அப்படின்னா இந்த தீபாவளிக்கு கண்டிப்பா செஞ்சு பாருங்க.
இந்த ரெசிபியை எல்லாராலயும் ரொம்ப ரொம்ப ஈஸியா சுலபமா செய்ய முடியும். இதுல ஒவ்வொருத்தரு ஒவ்வொரு மாதிரியான ஸ்டஃபிங் வைப்பாங்க ஒரு சிலர் பாசி பருப்பு வப்பாங்க, ஒரு சிலர் பாசி பயிறு வைப்பாங்க இன்னும் ஒரு சிலர் வேர்க்கடலை இந்த மாதிரி ஸ்டஃபிங் வைப்பாங்க. ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பாசி பயிறு ஸ்டப்பிங் தான் வைக்க போறோம். இந்த பச்சை பாசி பயிறு வறுத்து அரைச்சு அது கூட வெல்லம் கரைசல் சேர்த்து செய்யும்போது சுவை அருமையாக இருக்கும்.
இது கூட தேங்காய் துருவலையும் சேர்கிறதால சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இந்த சுவையான முந்திரி கொத்து ரெசிபிக்கு ஒரு சிலர் வெல்லம் சேர்ப்பாங்க. இன்னும் ஒரு சிலர் கருப்பட்டி சேர்த்து செய்வாங்க. இந்த முந்திரி கொத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இந்த சைடுல ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி அப்படின்னே சொல்லலாம். இது நம்ம எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கும்போது உன்னோட ஒன்னு ஒட்டும்போது பாக்குறதுக்கு ஆசையா சாப்பிடணும்னு நாக்குல எச்சில் ஊறும்.
அந்த அளவுக்கு ஒரு சுவையான ரெசிபி தான் இந்த முந்திரி கொத்து. இந்த டேஸ்டான முந்திரி கொத்து ரெசிபியை இதுவரைக்கும் நீங்க வீட்ல செஞ்சதே இல்ல அப்படின்னா கண்டிப்பா இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க வீட்ல இருக்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பாரம்பரியமான ஒரு ஸ்வீட் ரெசிபியை மறந்துடாதீங்க இப்ப வாங்க இந்த சூப்பரான முந்திரி கொத்து ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முந்திரி கேக் ஒருமுறை இப்படி மட்டும் வீட்டில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் பாசிப்பயறை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். வெல்லத்தை ஒரு கடாயில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பாசிப்பயிறு மாவை வெல்ல கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அரிசி மாவு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
பிறகு உருட்டி வைத்துள்ள பாசிப்பயறு மாவை மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முந்திரிக்கொத்து தயார்.






