- Prep
- 4h
- Cook
- 20 min
- Total
- 4h 20m
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, தேன்குழல் மிட்டாய் பல நிறங்களில் கிடைக்கிறது அதிலும் சர்க்கரைப்பாகு வைத்து செய்கிறார்கள் வெல்லப்பாக வைத்து செய்கிறார்கள் இதிலும் சிறப்பாக கருப்பட்டிப்பாக
இதையும் படியுங்கள் : வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் செய்வது எப்படி ?
வைத்து செய்கிறார்கள் இதனை பல வழிமுறைகளில் செய்யலாம் எப்படி செய்தாலும் இதன் சுவை அமோகமாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேன்குழல் மிட்டாய் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.
Ingredients
Method
தேன்குழல் செய்ய முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊறிய அரிசி,உளுந்தம் பருப்பை கிரைண்டரில் நன்றாக காட்டிக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
அதன் பின் வெல்லத்தை நன்கு தட்டி எடுத்து அதை சிறு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு சொட்டு பாகை அதில் ஊற்ற வேண்டும்.
பாகு தண்ணீரில் கரையாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாகுபு தயாராக உள்ளது என்று அர்த்தம்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி முறுக்கு பிழியும் அச்சில் அரிசி உளுந்தம் பருப்பு கலவையை அதில் எடுத்து எண்ணெய் காய்ந்ததும் பிழிய வேண்டும்.
அதனை தேன்குழல் பொரிந்ததும் அதை வெல்லப்பாகில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான தேன்குழல் ரெடி.






