- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், தட்டு வடையை செய்து கொடுங்கள். தமிழ்நாட்டில் பல சுவையான ஸ்நாக்ஸ் பிரபலமாக உள்ளன. அதில் தனித்துவமானதும், மிகவும் பிரபலமானதும் தட்டு வடை.
இந்த சிறப்பு உணவு நம்முடைய மாவட்டத்தில் அதிகம் பிரபலமடைந்தது. இது ஒரு பாரம்பரியமான வீட்டு சமையலிலிருந்து, தெரு உணவாக வளர்ந்து, இன்று பலரின் விருப்பமான ஸ்நாக்காக உள்ளது. இந்த தட்டு வடை ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதுவும் மாலை பொழுதில் சூடான டீயுடன் இந்த தட்டை வடையை சாப்பிடும்போது அவ்வளவு நிறைவாக இருக்கும். ஒரு வாரம் என்ன, ஒரு மாதத்துக்கு கூட வைத்து சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியம் நிறைந்த இந்த தட்டு வடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரத்தில் ஏதேனும் சாப்பிட விரும்பினால் இந்த மசாலா கார்ன் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் அரிசி மாவை நன்கு சலித்து ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளவும்.
பின் நெய்யை உருக்கி அரிசி மாவுடன் சேர்த்து அதனுடன் கருஞ்சீரகம், உப்பு, மிளகாய் தூள், வெள்ளை எள், கறிவேப்பிலையை நறுக்கி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் சுடு தண்ணீர் சிறிதளவு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இந்த கலவையை சின்ன உருண்டையாக உருட்டி தட்டி வைத்து கொள்ளவும். இப்படி அனைத்தையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதனை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான தட்டு வடை தயார்.






